;
Athirady Tamil News

மணிப்பூரில் மீண்டும் வன்முறை

0

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மெய்தி இன மக்கள் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குகி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணி யில் கலவரம் வெடித்தது. குகி மற்றும் மெய்தி சமூகங்க ளுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் 260 பேர் கொல்லப் பட்டனர். கிட்டத்தட்ட 60 ஆயிரம் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த கிராமத்தை விட்டு வெளியேறு மாநிலம் முழுவதும் அரசால் அமைக்கப்பட்ட நிவாரணமுகாம்கள் தஞ்சமடைந்து உள்ளனர். 3 ஆண்டுகளைக் கடந் தும் அங்கு வன்முறை நீடித்து வருகிறது.

6 பேர் கடத்தல்
இந்நிலையில் கடந்த மாதம் 13-ந்தேதி காங்போக்பி மாவட்டத் தில் மூன்று தேவாலயத் தலைவர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து லெய்லான் வைபி கிராமத்தில் நாகா சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் ஆயுதக் குழுக்களால் பணயக்கைதிகளாக கடத்த்பட்டனர். அதுபோல் சேனாபதி மாவட்டத்தில் 14 குகி நபர்கள் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டனர்.இதனை தொடர்ந்து மணிப்பூர் போலீசார், மத்திய ரிசர்வ் படை போலீசார் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் கடத்த பட்ட, நாகா, குகி இனத்தவர்களை தேடி வந்தனர்.

6 பேர் கொல்லப்பட்டனர்
இதற்கிடையே நேற்று முன்தினம் ஒரு மாதத்திற்கு முன்பு ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட 14 குகி நபர்கள் விடுவிக்கபட்டனர். 450 பாதுகாப்பு படை வீரர்கள், மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர் குழுக்களின் உதவியுடன் கடத்தபட்ட நாகா சமூகத்தைச் சேர்ந்த 6 பேரை தொடர்ந்து தேடிவந்தனர். தொடர் தேடுதல் வேட்டையில் நேற்று முன்தினம் பிற்பகல் நாகா சமூகத்தைச் சேர்ந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று அதிகாலை 6 பேரின் உடல்கள் தலைநகர் இம்பாலில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு குவிந்த நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். கரோங் பகுதியில் போராட்டகாரர்கள் 2 லாரிகளையும் தீயிட் டுக் கொளுத்தினர். இதனால் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது.

முழு அடைப்பு
இந்தக் கொலையைக் கண்டித்து, மணிப்பூரில் உள்ள நாகாக் களின் உச்ச அமைப்பான ஐக்கிய நாகா கவுன்சில், நேற்று மாநிலத்தின் சில பகுதிகளில் ஒரு நாள் முழு அடைப்பை நடத்தியது.இதுகுறித்து மணிப்பூர் முதல்-மந்திரி கேம்சந்த் சிங் வெளியிட்ட செய்தியில், “கடத்தப்பட்ட 6 அப்பாவி நாகா கிராமவாசிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டதால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மாநில அரசு இதுபோன்ற வன்முறை களை பொறுத்துக்கொள்ளாது. இந்த அட்டூழியங்களுக்கு ஊமை, சாட்சியாக இருக்காது. கொலைக்குக் காரணமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்படு வார்கள்” என கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.