;
Athirady Tamil News

விளம்பர பலகை இன்றி இயங்கும் காரைதீவு பொலிஸ் நிலையம் – காரைதீவு பொலிஸ் நிலையம் எங்கே? தேடும் பணியில் பொதுமக்கள்

0
24 மணி நேர கடமை அத்தியவசிய சேவை என கூறப்படும் இலங்கை பொலிஸ் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் மாலை 6 மணியுடன் பணிகள் நிறைவடைகின்றன.

அதாவது கடை ஒன்று காலையில் திறந்தால் மாலை 6 மணிக்கு பூட்டுவது போன்று பொலிஸ் நிலையங்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

பொதுமக்கள் தங்களது தேவை கருதி பொலிஸ் நிலையங்களுக்கு சென்றால் கூட பொலிஸாருக்கு ஏதோ ஒரு வகையில் குறை சொல்லி விட்டுத்தான் வருவார்கள்.இதில் பொலிஸார் தற்போது ஆளணி பற்றாக்குறை அதனால் தான் இவ்வாறு இலங்கை பொலிஸ் நிலைப்பாடு உள்ளது என அங்கலாய்க்கிறார்கள்.

ஆனால்  காரைதீவு பொலிஸ நிலையம் கடந்த 2021 ஆண்டு மக்கள் நலன் கருதி திறந்து வைக்கப்பட்டிருந்தது.ஆரம்பத்தில் பொது மக்களின் நன்மதிப்பை பெற்று ஒத்துழைப்புடன் இயங்கிய போதிலும் மக்கள் தற்போது குறை கூறும் வகையில் பொலிஸ் நிலைய செயல்பாடு அமைந்துள்ளது.மேலும்  டிக்வா சூறாவளி மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட எதிர்பாராத காலநிலை காரணமாக காரைதீவு பொலிஸ் நிலைய விளம்பர பலகை சேதமடைந்தது.

குறித்த விளம்பர பெயர்பலகை  அகற்றப்பட்டு கூட பல மாதகாலமாகின்றது.அண்மையில் சிரேஸ்ட பொலிஸ்  அத்தியட்சகர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் பரிசோதனைகள் நடைபெற்று நிறைவடைந்திருக்கின்றன.

ஆனால்  பொதுமக்கள் இன்று வரை பொலிஸ் நற்சான்றிதழ் முறைப்பாடு போக்குவரத்து உள்ளிட்ட சிவில்  விடயங்களுக்காக காரைதீவு பொலிஸ் நிலையத்தை தேடி வருகின்றனர்.காரணம் இன்று வரை காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கான விளம்பர பலகை இன்மை ஆகும்.

இந்த விடயத்தில் காரைதீவு பிராந்திய நிறுவனங்கள் உரிய கவனம் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.