;
Athirady Tamil News

விசேட டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனை

0

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய  இவ்வாரம் விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கமைய  ஜூன் 15 முதல் 20 வரை மதஸ்தலங்கள்  பொதுச் சந்தைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் ஆகியன டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

முதல் நாளான இன்று(15)  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின்  தலைமையில்  பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழல் பொறுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து இப்பரிசோதனையை மேற்கொண்டனர்.

இதன்போதுஇ நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் இனங்காணப்பட்டு உடனடியாக சுத்தம் செய்யப்பட்டது. மேலும், டெங்கு பரவலைத் தடுக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

டெங்கு நோயை கட்டுப்படுத்துவது சமூகத்தின் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். எனவே, வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களாவது ஒதுக்கி சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு பரவலைத் தடுப்போம் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதன் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.