இணைய பாவனையாளர்களை குறிவைத்து இலட்சக்கணக்கில் பணமோசடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இணையம் மூலம் வியாபாரம் செய்து பெருந்தொகை பணமோசடியில் ஈடுபட்ட இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 4,386,219 ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பேருவலவை சேர்ந்த 23 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பணமோசடி
வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேஸ்புக் மற்றும் டெலிகிராம் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.