;
Athirady Tamil News

தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டின் கால்பந்தாட்ட போட்டிகள் யாழில் ஆரம்பம்

0
தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் 36ஆவது தேசிய இளைஞர் விளையாட்டின் குழுப் போட்டிகளில் ஒன்றான ஆண் – பெண் இருபாலருக்குமான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில், யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா, தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மனுல சமல் பெரேரா, வடக்கு மாகாணப் பணிப்பாளர் காமினி, யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் சிவகாமி உமாகாந்தன், தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் வினோதினி சிறிமேனன், ஜெய்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஆகியோர் பங்கேற்றனர்.

விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு கொடியேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.