இனவழிப்புக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருவேறு இடங்களில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
லண்டனில் உள்ள இலங்கை தூதுரகம் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய இடங்களில் புலம்பெயர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற யூலை படுகொலை மற்றும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் பதாதைகளையும் ஏந்தி இருந்தனர். 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம்
திகதி தொடங்கி இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட
அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
இதில் புலம்பெயர் தமிழின செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
