;
Athirady Tamil News

சவூதி அரேபிய தூதரகத்துக்கு சென்ற அனோஜனின் குடும்பத்தினர்

0

சவூதி அரேபிய தூதரகத்துக்கு வருகை தந்த சிவராசா அனோஜனின் குடும்பத்தினரின் கோரிக்கைக் கடிதம் இன்னும் கையளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அனோஜனின் குடும்பத்தினரும்,அனோஜனின் விடுதலை கோரி கல்முனையிலிருந்து வருகை தந்த குழுவினரும் வெளிவிவகார அமைச்சுக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்
அதன் பின்னர் அவர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவித்தனர். வெளிவிவகார அமைச்சு ஊடாகவோ அல்லது ஜனாதிபதியின் ஆலோசனை பேரில் குறித்த கோரிக்கை கடிதத்தை கையளிப்பது தொடர்பாக அனோஜனுக்காக வருகைதந்த குழுவினர் கலந்தாலோசிப்பதாக கூறப்படுகிறது.

அதேசமயம் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையர் என தெரிவிக்கப்படும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினர் இன்று (21) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.