;
Athirady Tamil News

யாழ். இந்து சாரணர்களின் 110ஆவது ஆண்டு விழா

0

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் குழுவின் 110 ஆவது ஆண்டு விழா பாடசாலையின் சபாலிங்கம் அரங்கில் அண்மையில் (14.09.2026) இடம்பெற்றது.

துருப்புத் தலைவர் க.ஷரவணப்பிரியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். இந்துவின் முன்னாள் சாரணரும் இலங்கை தேசிய வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளருமான வைத்தியகலாநிதி சி.ஜமுனானந்தா கலந்துகொண்டார்.

பாடசாலை அதிபர் இ.செந்தில்மாறன், சாரணர் பொறுப்பாசிரியர் சி.ஜீவகநாதன் ஆகியோர்   விழாவில் கலந்துகொண்டு சாரணர்களின் சாதனைகள், செயற்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினர்.

இந்த நிகழ்வில் சிறந்த சாரண ஆளுமைகளுக்கான விருதும் சாரண சேவைக்கான கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

110ஆவது ஆண்டு சாரண நூலை பிரதம விருந்தினர் வைத்தியகலாநிதி சி.ஜமுனானந்தா வெளியிட்டு வைக்க முன்னாள் குருளை சாரண ஆசிரியர் திரு.பி.ஸ்ரீஸ்கந்தராஜா முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் குருளைச் சாரண ஆசிரியர் திரு.பி.ஸ்ரீஸ்கந்தராஜா  சாரணியத்துக்கு ஆற்றியை சேவையை கௌரவித்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இதேவேளை, யாழ். இந்து சாரணர்களின் 110ஆண்டு கால வரலாற்றைத் தாங்கிய காணொலியும் பாடலும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.