;
Athirady Tamil News

சவூதி அரேபியாவில் மரண தண்டனை; அனோஜனின் குடும்பத்திற்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி மொழி

0

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனின் குடும்பத்தினர் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பின்போது, அனோஜன் விவகாரத்தில் அரச தரப்பிலிருந்து மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தயார் என ஜனாதிபதி குடும்பத்தினரிடம் உறுதியளித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதியிடம் அனோஜனின் குடும்பத்தினர் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

முகனூல் பதிவொன்றில் மத நித்தனை செய்ததாக கூறி இலங்கை தமிழரான சிவராசா அனோஜனிற்கு சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அனோஜனை மீட்க , அரசியல்வாதிகள் உட்பட பலனும் முனைப்புகாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.