;
Athirady Tamil News

இந்த பகுதி கடற்கரை செல்வோர் அவதானம்; ஜெல்லிமீன்களால் பலர் காயம்!

0

பாணந்துறை கடற்கரையில் ஜெல்லி மீன்கள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜெல்லிமீன்கள் உடலில் பட்டதன் காரணமாக, கடலில் குளித்துக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாணந்துறை கடற்கரை உயிர் காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜெல்லிமீன்களால் காயமடைந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றையதினம் (26) பிற்பகல் பாணந்துரை கடற்கரைக்கு வருகை தந்த மக்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது, உடலில் ஜெல்லிமீன்கள் பட்டதால் இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

300-க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்கள் மீன்கள்…

நேற்றுப் பிற்பகல் வேளையில் மட்டும் சிறிய அளவிலான 300-க்கும் மேற்பட்ட ஜெல்லிமீன்கள் மீன்கள் பாணந்துரை கடற்கரைப் பகுதிக்கு ஒதுங்கியுள்ளதாக உயிர்காப்பக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜெல்லிமீன்கள் உடலில் பட்டவர்களில் சிலர் சிகிச்சைகாகப் பாணந்துரை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன், முதலுதவி பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நிலைமை மேலும் தீவிரமடைவதைத் தவிர்ப்பதற்காகச் செயற்பட்ட பொலிஸ் உயிர்காப்பகப் பிரிவு, கடலில் குளித்துக் கொண்டிருந்த அனைவரையும் உடனடியாகக் கடற்கரைப் பகுதியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே கடற்கரைக்கு வருகை தரும் மக்கள் இக்காலப்பகுதியில் கடலில் இறங்கும் போது அதிகக் கவனத்துடன் செயற்படுமாறு பாதுகாப்புப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.