காணிகளை விடுவிக்க கோரி பலாலியில் போராடியவர்களால் போக்குவரத்திற்கு இடையூறாம் – பொலிஸார் வழக்கு தொடர்வு
;
அன்றைய தினம் போராட்ட வடிவத்தை மாற்றி , பலாலி செபஸ்தியார் ஆலய முன்றலில் இருந்து , கறுப்பு மேலங்கி அணிந்து , கறுப்புக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறு பலாலி சந்தி வரையில் ஊர்வலமாக வந்து , பலாலி சந்திக்கு அருகில் உள்ள இராணுவ முன்னரங்கு முன்பாக கூடி , கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு சில மணி நேரம் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் பலாலி சந்தி பகுதிக்கு சென்று மதியம் வரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தினால் , வீதியில் பயணித்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக கூறியே பலாலி பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.