நல்லூரான் 17ஆம் திருவிழா
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை 17ஆம் திருவிழா இடம்பெற்றது.
17ஆம் திருவிழாவின் போது , வள்ளி தெய்வானையும், வேல் பெருமானும் இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
