;
Athirady Tamil News

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் புத்தாக்கக் கண்காட்சி

0
யாழ்ப்பாணம் , வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் ‘GENESIS – 2026’ புத்தாக்கக் கண்காட்சி மற்றும் புத்தக வெளியீட்டு நிகழ்வு  இன்றைய தினம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கண்காட்சியை முழுமையாகப் பார்வையிட்டதுடன், மாணவர்களின் புத்தாக்கப் படைப்புகளையும் பாராட்டினார்.

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் அதிபர் கிறேஸ் தேவதாயினி தேவராஜாவின் தலைமையில் நடைபெறும் இப்புத்தாக்கக் கண்காட்சி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மற்றும் நாளைய தினம் புதன்கிழமை ஆகிய இரு நாட்களும் பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கண்காட்சியைப் பார்வையிட்ட ஆளுநர், மாணவர்கள் தமது சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கியிருந்த பல்வேறு படைப்புகளை நேரில் பார்வையிட்டு, அவை தொடர்பில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.