;
Athirady Tamil News

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை சுட்டுக்கொன்று தற்கொலை செய்த முன்னாள் காதலன் – அதிர்ச்சி சம்பவம்

0

லக்னோ,

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை சுட்டுக்கொன்ற முன்னாள் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூர் கேரி மாவட்டம் ஹிடயத் நகர் பகுதியில் தனியார் ஆரம்ப பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் நிஷாத் பாத்திமா (வயது 26) என்ற இளம்பெண் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இதனிடையே, பாத்திமாவும் அதே பகுதியை சேர்ந்த முகமது சாத் (வயது 28) என்ற இளைஞரும் 2 ஆண்டுகளுக்குமேல் காதலித்து வந்தனர்.

ஆசிரியையை சுட்டுக்கொன்று முன்னாள் காதலன் தற்கொலை

இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் முகமதுவுடனான காதலை முறித்த பாத்திமா அவருடன் பேசுவதையும் நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில், பாத்திமா வேலை பார்த்துவந்த பள்ளிக்கூடத்திற்கு நேற்று காலை 11.30 மணியளவில் முன்னாள் காதலன் முகமது வந்துள்ளார். தனியாக சிறிது நேரம் பேச வேண்டும் என பாத்திமாவிடம் முகமது கூறியுள்ளார்.

இதையடுத்து, வகுப்பறையில் இருந்த பாத்திமா அங்கிருந்து வெளியேறி முகமதுவுடன் பள்ளியின் மாடிக்கு சென்றுள்ளார். மாடிக்கு சென்றவுடன் தான் மறைத்து கொண்டு வந்த துப்பாக்கியால் பாத்திமாவை முகமது சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் பாத்திமா ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, முகமதுவும் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு அங்கேயே தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.