;
Athirady Tamil News

ஹெரோயின் வைத்திருந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

0

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தலில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி வெல்லம்பிட்டிய பகுதியில் 4.95 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பிரதிவாதியான பெண்ணுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கின் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிக்கு எதிராக முறைப்பாட்டாளர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதற்கமைய, பிரதிவாதியான பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.