;
Athirady Tamil News

மாகாண மட்டத்தில் சாதனை படைத்த யா/ புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவிகள்

0
யா/ புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவிகள், இன்று (10.10.2026) நடைபெற்ற மாகாண மட்ட நடனப் போட்டிகளில் தில்லானா நடனம் மற்றும் கும்மி நடனம் ஆகிய இரு பிரிவுகளிலும் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.
கடுமையான போட்டிக்கு மத்தியில், தமது திறமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்தி இரு நடனப் பிரிவுகளிலும் முதலிடத்தைப் பெற்றமை பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளது.
இச்சாதனைக்குப் பின்னால் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புடனான வழிகாட்டலும் மாணவிகளின் கடின உழைப்பும் சிறந்த செயலாற்றுகையும் முக்கிய பங்கு வகித்துள்ளன.
இந்நடன நிகழ்வுகளின் நெறியாள்கையை நடன ஆசிரியர் மேகலா செல்வக்குமார் மேற்கொண்டதுடன், சங்கீத ஆசிரியர் சரஸ்வதி கோபிநாத் அவர்களும் மாணவிகளின் வெற்றிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவிகளுக்கும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் பாடசாலைச் சமூகம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.