;
Athirady Tamil News

விவசாயத் துறையில் டிஜிட்டல் புரட்சிக்கு தயாராகும் இலங்கை

0

இலங்கையின் விவசாயத் துறையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நவீனமயமாக்குதலை நோக்கமாகக் கொண்ட ‘AgriConnect Sri Lanka’ திட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவுக்கும் உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கும் இடையே நேற்று (13) கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான உலக வங்கி குழுமத்தின் முகாமையாளர் கேவோர்க் சர்க்சியான் (Gevorg Sargsyan) தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

இத்திட்டத்தின் தொடக்க விழா எதிர்வரும் 30 ஆம் திகதி கொழும்பு TRACE Expert City வளாகத்தில் நடைபெறவுள்ளது.

உலக வங்கி குழுமத்தின் இந்த உலகளாவிய விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் இணையும் தெற்காசியாவின் முதல் நாடு இலங்கை என்பதுடன், இது நாட்டின் விவசாயத் துறைக்குக் கிடைத்த ஒரு முக்கிய மைல்கல்லாகும் என்றும் உலக வங்கிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இக்கலந்துரையாடலில் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) சிரேஷ்ட உள்நாட்டு அதிகாரி விக்டர் அந்தோனிப்பிள்ளை, செயற்பாட்டுப் பிரதானி தொம்சா ரிக்கார்டோ ரொசாடா வில்லாமர், சிரேஷ்ட பொருளாதார நிபுணர் பெலிப்பே எஃப். டிஸோன், சிரேஷ்ட விவசாயத்துறை நிபுணர் அத்துல சேனாரத்ன மற்றும் ஜனாதிபதி செயலகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.