வவுனியா ஓமந்தையில் விபத்து! சிறுவன் உட்பட மூவர் படுகாயம்
வவுனியா, ஓமந்தை – ஏ9 வீதியில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரமாக இருந்த பள்ளத்திற்குள் கவிழ்ந்ததில் சிறுவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த கார் ஒன்று வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
இதில் சிறுவன் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து ஓமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.