;
Athirady Tamil News

உக்ரைனில் 2 ரெயில்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா – 13 பேர் உயிரிழப்பு

0

கீவ்,

உக்ரைனில் 2 ரெயில்கள் மீது ரஷிய ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன்-ரஷியா போர்

உக்ரைன், ரஷியா இடையிலான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அதேவேளை, பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனாலும், இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

டிரோன் தாக்குதல்

இந்நிலையில் மத்திய உக்ரைனில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த 2 ரெயில்கள் மீது ரஷியா ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டினிப்ரோ பகுதியில் பயணிகள் ரெயில்கள் மீது ‘பயங்கரவாத தாக்குதல்’ நடத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.