;
Athirady Tamil News

பச்சிளம் குழந்தையின் உயரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை

0

உடப்பு, கொத்தாந்தீவு பகுதியில் வீட்டின் முன்பாக இருந்த சிறிய கிணற்றில் தவறி வீழ்ந்து பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (31) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணை
அந்த குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்ததன் பின்னர் உடனடியாக கொத்தாந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அது ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெரியபாடு, கொத்தாந்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு வருடமும் 4 மாதங்களும் வயதுடைய பெண் குழந்தையே இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளது.

தற்போது உயிரிழந்த குழந்தையின் சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உடப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.