;
Athirady Tamil News

Sinopec எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடு

0

இலங்கையில் சீன நிறுவனமான ‘சினோபெக்’ (Sinopec) தனது அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலைய விநியோகத்தர்களுக்கு வழங்கும் தினசரி எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது.

‘சினோபெக்’ நிறுவனத்தால் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த எரிபொருள் குறைப்பு காரணமாக, தீவு முழுவதிலும் உள்ள பல சினோபெக் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில், குறிப்பாக ‘ஒக்டேன் 95’ (Octane 95) வகை பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் எரிபொருளைப் பெற வரும் வாடிக்கையாளர்கள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில், நாட்டின் பல பகுதிகளில் அமைந்துள்ள சினோபெக் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் சிவப்பு நிற அறிவிப்புப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

“சினோபெக் நிறுவனம் தனது அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கும் வழங்கும் எரிபொருளைக் கட்டுப்படுத்தியுள்ளதால், எரிபொருளைப் பெற வரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” என அந்த எரிபொருள் நிரப்பும் நிலைய நிர்வாகங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளன.

நிறுவனத்தின் விநியோக முனையத்தில் (distribution terminal) இருந்து கிடைக்கும் எரிபொருள் இருப்புகள் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், தினசரி ஆர்டர் செய்யப்படும் எரிபொருள் இருப்புகள் கிடைக்காமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.