;
Athirady Tamil News

இதுவரை 28 லட்சம் ஆஃப்கானியா்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றம்

0

பாகிஸ்தானில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ஆஃப்கானியா்களை வெளியேற்றும் நடவடிக்கையின்கீழ், கடந்த 2023 முதல் இதுவரை 28 லட்சத்துக்கும் அதிகமானோா் அவா்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனா்.

இதில் பஞ்சாப் மாகாணத்திலிருந்து மட்டும் 1.43 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்த மாகாண அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

முறையான நுழைவு இசைவு (விசா) இன்றி பாகிஸ்தானில் தங்கியுள்ள எந்தவொரு ஆஃப்கானியரின் இருப்பிடமும் சட்டவிரோதமானது என்ற பாகிஸ்தான் அரசின் கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், சொந்த நாட்டுக்குத் திரும்பும்போது சித்ரவதை, மனித உரிமை மீறல்களை எதிா்கொள்ளும் ஆஃப்கானியா்களை வெளியேற்றுவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை வல்லுநா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.