திருகோணமலை வைத்தியசாலைக்கு அருகில் விபத்து ; இருவர் படுகாயம்
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (21) காலை நேர வியாபாரத்திற்காக பேக்கரி பொருட்களை ஏற்றிச் சென்ற ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது.
இச் சம்பவத்தில்…
யாழில் இரு பிரபல பாடசாலைக்கு அருகில் அரங்கேறும் செயல் ; நகர சபையின் அதிரடி
பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல் அச்சிற்றுண்டிச்சாலையை மூடுவதென்றும்…
பிரான்ஸ் மதுபானங்களுக்கு 200% வரி: மேக்ரானுக்கு டிரம்ப் மிரட்டல்!
காஸா அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200% வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்படும் நாடுகள், போரில் ஈடுபடுவதைத் தடுக்கும்…
சீனாவில் பிறப்பு விகிதம் வரலாறு காணாத வீழ்ச்சி!
சீனாவில் 1949-ஆம் ஆண்டு கம்யூனிஸ புரட்சிக்குப் பிறகு, மிகக் குறைந்த 5.63 சதவீத பிறப்பு விகிதம் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டில் சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை வெறும் 79.2 லட்சமாகும். இது முந்தைய ஆண்டைவிட 16.2 லட்சம் (17…
லாரி மீது பள்ளி வேன் மோதி கோர விபத்து; மாணவ-மாணவியர் 13 பேர் பலி
கேப்டவுன்,
தென் ஆப்பிரிக்காவின் கவுடங்க் மாகாணம் வெண்டர்பிஜில்பார்க் நகரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு இன்று காலை பள்ளி வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 25க்கும் மேற்பட்ட…
தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு; வெளியான மகிழ்ச்சி்த் தகவல்
ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இது…
தென்சீனக் கடல் பகுதியில் புதிய எரிவாயு இருப்பு கண்டுபிடிப்பு: பிலிப்பின்ஸ் அதிபா்…
தென்சீனக் கடலை ஒட்டியுள்ள பிலிப்பின்ஸின் கடல் எல்லைப்பகுதியில், புதிய இயற்கை எரிவாயு இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபா் ஃபொ்டினாண்ட் ஆா். மாா்கோஸ் ஜூனியா் திங்கள்கிழமை அறிவித்தாா்.
பலாவன் மாகாணத்தின் வடமேற்கே, தற்போது…
பிரான்ஸ் “ஜெயா சஸ்பாநிதியின்” பிறந்தநாளைக் கொண்டாடிய தாயக உறவுகள்.. (படங்கள்,வீடியோ)
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் “ஜெயா அக்கா” என எல்லோரினாலும் அன்புடன் அழைக்கப்படும் திருமதி சஸ்பாநிதி ஜெயக்குமாரி அவர்களின் பிறந்தநாள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் தாயக உறவுகளினால் கொண்டாடப்பட்டது
புங்கையூரை பூர்வீகமாக கொண்ட…
இலங்கைக்கு வாகன இறக்குமதியால் குவிந்த வருமானம்!
நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு இதுவரை 904 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (20) பாராளுமன்றத்தில் ரோஹித அபேகுணவர்தன எம்.பி. எழுப்பிய கேள்விக்கு…
சிரிய அரசு – குா்து ஆயுதக் குழு இடையே போா்நிறுத்த ஒப்பந்தம்
சிரியாவில் செயல்பட்டு வரும் குா்து இன மக்களின் ஆயுதக் குழுவான சிரிய ஜனநாயகப் படையுடன்(எஸ்டிஎஃப்), அந்நாட்டு அரசு போா்நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
இதன்மூலம், சிரியாவில் அதிகாரப் பகிா்வுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வந்த…
களுவாஞ்சிகுடி சந்தையில் பழுதடைந்த மீன்கள் விற்பனை
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி மீன் சந்தையில் இன்று (20) மனித நுகர்வுக்கு ஒவ்வாத பழுதடைந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட 16 கிலோ கீரி மீன்கள் கைப்பற்றப்பட்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் உடனே அழிக்கப்பட்டது.
களுவாஞ்சிகுடி பகுதி பொதுச்…
ஆப்கானிஸ்தான்: ஓட்டல் குண்டுவெடிப்பில் சீனர் உள்பட 7 பேர் பலி
காபூல்,
ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் ஷார்-இ-நவ் பகுதியில் சீன முஸ்லிம்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் கூட்டாக இணைந்து ஓட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். சீன முஸ்லிம்களுக்காகவே இந்த ஓட்டல் நடத்தப்பட்டு வந்துள்ளது என…
இஸ்ரேலுக்கு அனுப்பப்படவுள்ள 1,000 இலங்கையர்கள் ; யாரிடமும் ஏமாற வேண்டாம்!
இஸ்ரேலில் வீட்டு அடிப்படையிலான பராமரிப்பாளர் பணிகளுக்காக 2026 ஆம் ஆண்டில் 1,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையிலான நேரடி உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புத்!-->!-->…
அமைதிக்கான நோபல் மறுப்பு ; ட்ரம்ப் கூறும் அதிர்ச்சி காரணம்
கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது முயற்சிக்கும், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாததற்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இதனால் ஐரோப்பிய நாடுகளுடனான…
சீனாவில் தொழிற்சாலை ஒன்றில் பாரிய வெடிப்பு சம்பவம்
சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் இரண்டு பேர் பலியானதுடன் , 84 பேர் காயமடைந்து, எட்டு பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வெடிப்பு சம்பவம் மங்கோலிய எல்லையின் உட்…
யாழில் இருவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60 வயதுடைய…
ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை கொடுத்ததாக வீடியோ வெளியிட்ட யூடியூபர்; கேரள நபர் தற்கொலை
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் தீபக் (வயது 41). இவர் அப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் சேல்ஸ் மேனேஜராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை பஸ்சில் பணிக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பஸ்சில்…
வடக்கில் கல்வியில் அரசியல் தலையீடு என குற்றம் சாட்டும் இலங்கை தாய்மொழி ஆசிரியர்…
வடமாகாணத்தில் கல்வியில் அரசியல் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
கல்வி…
நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்த இயக்குவதற்கு நடவடிக்கை
நெடுந்தீவுக்கான படகுகள் சேவைகள் இன்றி , பயணிகள் பெரும் இடர்களை சந்தித்து வரும் நிலையில் , வடதாரகையை இயக்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கடற்படை வடபிராந்திய கட்டளை தளபதி நெடுந்தீவு பிரதேச செயலரிடம் உறுதி அளித்துள்ளார். …
3 வீடுகள் மற்றும் கார்… வட்டிக்கு பணம் கொடுக்கும் கோடீஸ்வர பிச்சைக்காரர்!
இந்தூர் மாகாணத்தின் சராஃபா பகுதியில் பிச்சையெடுத்த மாற்றுத்திறனாளி ஒருவரை மீட்புக் குழுவினர் விசாரித்தபோது, அவர் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி என்பது தெரியவந்துள்ளது. குறித்த விடயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாங்கி…
இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை! டிரம்ப்
இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று நார்வே பிரதமருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்பட 8 போர்களை நிறுத்தியதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று…
யாழில். முதியவர் படுகொலை – இருவருக்கு மரண தண்டனை
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்பகுதியை சேர்ந்த 60…
வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? – யாழில்.…
யாழ் மாவட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,…
வட மாகாணத்தில் முதலிட முதலீட்டாளர்கள் ஆர்வம் – நாம் தயாராக வேண்டும்
முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ள நிலையில், அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களை மேம்படுத்தி, முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.…
சண்டிலிப்பாயில் முச்சக்கர வண்டி மோதி – வயோதிபப் பெண் பலி
சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக முச்சக்கர வண்டி மோதி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சண்டிலிப்பாய் மத்தியைச் சேர்ந்த செல்லத்துரை மனோன்மணி (வயது-80) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,…
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை இந்திய பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன
இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களை வழங்குகின்றன. இதனால் உயர் கல்வியை எமது மாணவர்கள் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யுhழ். இந்தியத் துணைத்…
சிறுபான்மையினா் மீதான தாக்குதல்களுக்கு வகுப்புவாதம் காரணமல்ல: வங்கதேசம்
‘வங்கதேசத்தில் 2025-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் மீதான தாக்குதல் சம்பவங்களில் பெரும்பாலானவற்றுக்கு வகுப்புவாதம் (மதவாதம்) காரணம் அல்ல’ என்று அங்கு ஆட்சி செய்யும் தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால…
கள்ளக்காதலியை கொன்று உடலை எரித்து பெட்டியில் எடுத்து சென்ற முன்னாள் ரெயில்வே ஊழியர்…
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள ஐ.டி.ஐ. பகுதியை சேர்ந்தவர் பிரீத்தி(வயது 32). இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், 62 வயதான ராம் சிங் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
மேலும்…
சிலியில் காட்டுத் தீ: 18 பேர் பலி; அவசரநிலை அறிவிப்பு!
சிலி நாட்டில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக் அவசரநிலையை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிலியின் வனத்துறை அமைப்பு கூறுகையில்,
நாடு முழுவதும் 24 இடங்களில் காட்டுத் தீ…
நாட்டில் வைரஸ் நோய்களின் பரவல் ; சிறுவர்கள் பாதிப்பு
நாட்டில் நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே குறிப்பிடுகையில், சிறுவர்கள் மத்தியில் இந்த…
அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே சீற்றம்
தமிழர் தாயகத்தில் தமிழ் கட்சிகளை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு நிகழ்வுகளை நடத்தும் பொழுது அந்த நிகழ்வுகள் ஜே.வி.பி மற்றும் என்.பி.பி யின் நிகழ்வாகவே காட்டப்படுகிறது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான …
செம்மணி புதைகுழி காணப்படும் இடத்தில் நிலத்தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது…
செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தின் நிலத்தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது என்றும் அவ்வாறு ஏதும் செய்வதாயின் நீதிமன்ற அனுமதி அவசியம் எனவும் மன்றினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி…
செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்கு திரும்பியது
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித…
பாகிஸ்தான் வணிக வளாகத்தில் தீ விபத்து: 14 ஆக உயர்ந்த பலி!
பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் எட்டு உடல்கள் மீட்டெடுக்கப்பட்டதை அடுத்து, பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் எம்.ஏ. ஜின்னா சாலையில் குல் பிளாசா என்ற வணிக வளாகம் கடந்த…