;
Athirady Tamil News

சீனி விலை உயர்வு பற்றிய அறிக்கை வேண்டும் !!

சந்தையில் சீனி விலை அதிகரிக்கப்பட்டுள்ளது தொடர்பில் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் திணைக்களத்திடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இன்று தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்க டொலருக்கு…

ஜீவனை சந்தித்தார் கடம்பூர் ராஜு !!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழகத்தின் முன்னாள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையிலான அதிமுக குழுவினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான…

போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் இளைஞர் கைது; யாழ்.நகரில் சம்பவம்!!

போலி நாணயத்தாள்களை அச்சிடும் மின்னியல் இயந்திரத்துடன் 18 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 1.3 மில்லியன் ரூபாய் பெறுமதியிடப்பட்ட போலி நாணயத்தாள்களுடன் பளையில் வைத்து இளைஞர் ஒருவர்…

அமெரிக்காவில் வணிக வளாக துப்பாக்கி சூட்டில் தெலுங்கானா நீதிபதியின் மகள் பலி!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்தவர்களை மர்ம நபர் சரமாரியாக…

நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு ஜூலை 1 முதல் வழங்கப்படும்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் ´அஸ்வெசும´ (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஜூலை 01 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற…

ஆதார் திருத்த மசோதாவுக்கு பொதுமக்கள் கருத்து கூற மேலும் 15 நாள் கால அவகாசம்- மத்திய அரசு!!

நாடு முழுவதும் பொது மக்களின் விபரங்களை தெரிந்து கொள்ள ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டையை சரிபார்க்கும் உரிமையை தனியாருக்கும் வழங்க மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடிவு செய்தது. இதற்கு சமூக ஆர்வலர்கள்…

தைவானுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும்- அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை !!

தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கிடையே தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. அதன் ஒருபகுதியாக சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தைவானுக்கு சுற்றுப்பயணம்…

யாழில். அதிகரித்துள்ள மோட்டார் சைக்கிள் திருட்டு – குற்ற செயல்களுக்காக…

யாழ்ப்பாண நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிளில் திருட்டுக்கள் அதிகரித்து உள்ளதாகவும் , அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர். அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்க…

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் மீதான விவாதம் ஒத்திவைப்பு!!

இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படாது என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று காலை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான…

பணத்திற்கு அமைச்சர் பதவிகளை வழங்க அரசாங்கம் முயற்சி !!

பாராளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் பெயரை எதிர்க்கட்சிகள் முன்மொழிந்த போதிலும், அத் தீர்மானத்தை எடுப்பதில் தொடர்பில் தெரிவுக்குழுவை ஒத்திவைத்ததாலும், தெரிவுக்குழுவை நடத்தாது விட்டமையினாலும் சட்டவிரோத தலைவர்கள்…

100 வீடுகள் எரிக்கபட்டிருக்கும்;விஜயதாஸ !!

கடந்த வருடம் மே 10 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில அரசியல்வாதிகளின் வீடுகளுக்குத் தீ வைக்கத் திட்டமிடப்பட்டதாக நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார். எரிப்பதற்காக 100 வீடுகள்…

கேரளாவில் படகு விபத்துக்கான காரணம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை!!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் பகுதியில் நேற்று முன்தினம் கடலில் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து 22 பேர் பலியானார்கள். படகில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றதே விபத்துக்கு காரணம் என…

பல நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்திய கடற்படை போர் பயிற்சியில் சீன விமானங்கள் ஊடுருவ…

தென்சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே முதல் ஆசியான்-இந்தியா கடற்படை போர் பயிற்சி தென் சீனக்கடலில் கடந்த 2 நாட்களாக நடந்து முடிந்தது.…

2027-ம் ஆண்டுக்குள் பெரிய நகரங்களில் டீசல் வாகனங்களை தடை செய்ய வல்லுநர் குழு மத்திய…

காற்று மாசுபடுவதை தடுப்பதற்காக மத்திய எண்ணெய் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் தருண் கபூர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மத்திய எண்ணெய் அமைச்சகத்துக்கு பல்வேறு பரிந்துரைகளை அறிக்கையாக அளித்துள்ளது. அதில் 10…

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் !!

ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் பைசாபாத்தில் இருந்து தென் கிழக்கே 116 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவானது. 120 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம்…

ம.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 15 பேர் பலி!!

மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தூருக்கு சென்று கொண்டிருந்த இந்த பேருந்து, டோங்கர்கான் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த…

பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை!!

பாதுக்க, வட்டரெக்க பகுதியில் உள்ள வாடகை வீடொன்றில் பெண்ணொருவரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் பொலிஸாரால் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டில் கட்டட பணியாளர் ஒருவருடன்…

தமிழ் கைதிகள் மீது அச்சுறுத்தல்: லொஹானுக்கு நோட்டீஸ்!!

பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக பதவியில் இருந்த போது, அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் இரவு அத்துமீறி…

தாலிபான்களுடன் கை கோர்க்கும் சீனா.. கேப்பில் நுழைந்த பாகிஸ்தான்.. உற்று நோக்கும் உலக…

ஆப்கன் நாட்டில் இப்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில், சீனா- பாகிஸ்தான் இணைந்து முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கன் நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின. சுமார் 20 ஆண்டுகளாக அங்கே…

துணி துவைக்க சென்றபோது 3 சிறுமிகள் குளத்தில் மூழ்கி பலி!!

ஆந்திர மாநிலம், வனபர்த்தி மாவட்டம் தடிபாமுலாவை சேர்ந்தவர் கந்தம் குருமன்னா. இவருடைய மகள்கள் திருப்பத்தம்மா (வயது 12), சந்தியா (9), தீபிகா (7) ஆகியோர் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சிறுமிகள் 3 பேரும் வீரா…

புதிய புயல் உருவாகின்றது!!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள வளிமண்டல நிலை இன்று பங்களாதேஷ் மற்றும் மியான்மரை நோக்கி நகர்ந்து புயலாக மாறும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில…

மே 9’ ஐ நினைவுகூர தடை !!

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக மக்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்ட சம்பவங்களை நினைவுகூருவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில்…

ஜானக்கவை பதவி நீக்க காஞ்சன தீவிரம்!!

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக்க ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் அறிக்கை பாராளுமன்ற பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பாடசாலைகளுக்கு இராணுவப் பாதுகாப்பு!!

மன்னாரில் கடந்த சில நாட்களாக சிறுவர்களை இலக்கு வைத்து கடத்தல் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் கடந்த சனிக்கிழமை மற்றும் நேற்றைய தினம் (08) மக்கள் நடமாட்டம் குறைந்த பாதை வழியாக பயணித்த தங்களுக்கு உணவு பொருட்களை வழங்கி கடத்த முயற்சிகள் மேற்…

“பரு” வந்தால் எச்சரிக்கை தேவை! மூக்கில் வந்த குட்டி பரு.. கடைசியில் பார்த்தால்…

இளம்பெண் ஒருவருக்கு முகத்தில் சாதாரணமாக ஏற்பட்ட பரு மிக மோசமான பாதிப்பிற்குக் காரணமாக அமைந்துள்ள ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. முகத்தில் பிம்பிள் எனப்படும் முகப்பருக்கள் ஏற்படுவது ரொம்பவே வழக்கமான ஒரு நிகழ்வு தான். பல சமயங்களில் அவை…

மன்னார் அரச அதிபரின் கணவர் என்பதற்காக முறையற்ற அதிபர் நியமனம்!!

முறையற்ற அதிபர் நியமனம் : மன்னார் வங்காலை பாடசாலையில் எழுந்த புதிய சர்ச்சை !! முறையற்ற அதிபர் நியமனம் மன்னார் வங்காலை பாடசாலையில் எழுந்த புதிய சர்ச்சை எழுந்துள்ளது இதற்கு எதிராக ஆசிரியர் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றை…

திருப்பதி கோவில் தங்க கோபுரத்தை வீடியோ எடுத்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை- தேவஸ்தானம்…

திருமலை-திருப்பதி தேவஸ்தான விதிமுறைகளின்படி ஏழுமலையான் கோவிலுக்குள் மின்சார மற்றும் மின்னணு சாதனப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை எடுத்துச் செல்வதும், அதன் மூலம் வீடியோ எடுப்பதும் குற்றமாகும். இந்தநிலையில் நேற்று முன்தினம் மர்மநபர் யாரோ…

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!! (PHOTOS)

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வீடு அமைந்துள்ள வல்வெட்டித்துறை , ஆலடி பகுதியில் கஞ்சி…

200 ஷூக்களை ஸ்கெட்ச் போட்டு திருடிய 3 பேர்! ஆனா நோ யூஸ்! திருடியது பூரா வலது கால்…

ஷூக்கடையில் ஒன்றுத்துக்கும் உதவாத வகையில் வலது கால் ஷூக்களை மட்டும் திருடிய சம்பவத்தை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம் பெருவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பணம், நகை திருட்டு போய் ரூ 10 மதிப்புள்ள பொருட்களையும் ரிஸ்க் எடுத்து திருடும்…

27 வயசாகுது இன்னும் ஒரு கேர்ள் பிரண்டு இல்லை! 71 மீட்டர் புத்தரிடம் லவுட் ஸ்பீக்கரில்…

71 மீட்டர் உயரம் கொண்ட புத்தரிடம் தனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் வேண்டும், 11 கோடி ரூபாய் பணம் வேண்டும் என கேட்டு சீனர் ஒருவர் ஸ்பீக்கர் மூலம் கத்தி வேண்டி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிசுவான்…

திடீர் திருப்பம்.. டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கத் தொடங்கியதில் இருந்தே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. அடுத்தடுத்த நகர்வுகளில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து, எடப்பாடி…

கடவுள் மறுப்பு பேச்சு.. பாகிஸ்தான் மதகுரு கொடூர படுகொலை! இம்ரான் கான் கட்சி கூட்டத்தில்…

பாகிஸ்தானில் எதிர்க்கட்சியான இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் பொதுக்கூட்டத்தின்போது கடவுள் மறுப்பை பேசிய மதகுரு ஒருவரை நூற்றுக்கும் மேற்பட்டோரை கொண்ட கும்பல் அடித்துக் கொடூரமாக கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பாகிஸ்தானில் வட…

மத்திய வங்கி சட்டமூல விவாதம் வியாழக்கிழமை !!

மத்திய வங்கியை சுயாதீன நிறுவனமாக மாற்றும் நோக்கில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலத்தை எதிர்வரும் வியாழக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையால்…

வடக்கு உள்ளிட்ட மாகாணங்களுக்கு இன்று கடும் மழை !!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்யும் எனவும்,…