லெபனானில் பாலஸ்தீன அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 13 பேர் பலி!
லெபனான் நாட்டின் தெற்கு மாகாணத்தில், அமைந்திருந்த பாலஸ்தீன அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படை இடையில், கடந்த 2024 ஆம் ஆண்டு…
யாழ்ப்பாணம் நல்லூர் நினைவாலயம் நாளை அங்குரார்ப்பணம்
தாய்மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் யாழ்ப்பாணம் நல்லூர் நினைவாலயம் நாளை வெள்ளிக்கிழமை (21) மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
தாய்மண்ணுக்காக தம் உயிர்களை அர்ப்பணித்தவர்களுடன்…
உத்கியாக்விக் நகருக்கு பாய் பாய் சொன்ன சூரியன்! இனி ஜன. 23-ல்தான்!
அமெரிக்காவின், அலாஸ்கா மாகாணத்தில் அமைந்துள்ள உத்கியாக்விக் நகருக்கு சூரியன் பிரியாவிடை கொடுத்துவிட்டது. இனி 65 நாள்கள் முழுவதும் இருள்தான், ஜன.23ஆம் தேதிதான் சூரிய உதயத்தைக் காண முடியுமாம்.
வட அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில்…
நாடு முழுவதும் திரிபோசாவுக்கு கடும் பற்றாக்குறை
நாடு முழுவதும் உள்ள பல மகப்பேறு மற்றும் சிறுவர் வைத்தியசாலைகளில் திரிபோசாவுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவ தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.…
கடல் உணவுகளுக்கு மீண்டும் தடை ; தீவிரமடையும் சீனா – ஜப்பான் மோதல்
ஜப்பானியப் பிரதமர் சனாய் டகாயிச்சி தைவான் குறித்து பேசிய கருத்துக்களால் இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சீனா மீண்டும் ஜப்பானிய கடல் உணவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்கவுள்ளதாக ஜப்பானிய ஊடகங்களை…
அவசரமாக தாந்தாமலையில் தொல்பொருள் திணைக்கள அறிவித்தல் ; அடுத்த ஆக்கிரமிப்பா?
மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப்பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள தாந்தாமலை முருகன் ஆலயத்தில் செல்லும் வீதிகளில் இரு இடங்களில் இன்று ( 20 ) பி.ப:1.30 மணிக்கு தொல்பொருள் திணைக்களத்தால் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது .…
ஏதிலிகள் குறித்து பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கையால் வலுக்கும் விமர்சனம்
பிரித்தானிய உள்துறைச் செயலாளரான ஷபானா மஹ்மூத் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில், அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முன்னதாக, ஷபானாவின் கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலம்பெயர்தல்…
திணறடித்த பனிபுயல்! சிலியில் பிரித்தானிய பெண் சுற்றுலா பயணி உயிரிழப்பு
சிலி நாட்டில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக பிரித்தானிய பெண் சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார்.
பிரித்தானிய சுற்றுலா பயணி உயிரிழப்பு
சிலி நாட்டின் படகோனியா(Patagonia) பிராந்தியத்தில் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக பிரித்தானிய பெண் சுற்றுலா…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம்கோர்ட்டு
புதுடெல்லி,
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் பல கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு…
தமிழகத்தில் திருமண பந்தத்தில் இணையும் ஜீவன் தொண்டமான்; ரணிலும் பங்கேற்பு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானின் திருமணம் எதிர்வரும் 23ஆம் திகதி தமிழ்நாடு, திருப்பத்தூரில் நடைபெறவுள்ளது.
நேற்று (19) நிச்சயதார்த்த நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
தமிழக முதலமைச்சர் உட்பட தமிழக…
பெற்றோர் தகராறில் 9 வயது பிள்ளைக்கு நேர்ந்த கதி ; தந்தை தப்பியோட்டம்
பெற்றோர் தகராறில் பறிபோன 9 வயது பிள்ளையின் உயிர் கண்டியில் கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலஹ பகுதியில் உள்ள வீடொன்றில் தாய் மற்றும் தந்தைக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் பிள்ளை தீக்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
யாழில் கள்ளுத்தவறணையில் இளைஞர்கள் செய்த கொடூர செயல் ; பொலிஸார் வலைவீச்சு
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றில் நேற்று (19) முதியவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறித்த முதியவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,…
நடு கடலுக்குள் திடீரென பலியான 09 பிள்ளைகளின் தந்தை ; தமிழர் பகுதியில் சம்பவம்
சுழியோடி மூலம் கடல் அட்டை மற்றும் சங்கு சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த 50 வயதுடைய 09 பிள்ளைகளின் தந்தை ஒருவர் கடலுக்குள் வைத்து திடீரென உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் கற்பிட்டி கடற்பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.…
வலி. வடக்கில் மாவீரர்களுக்கு அஞ்சலி
வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சபை அமர்வுகள் ஆரம்பமானது.
வலி வடக்கு பிரதேசசபையின் மாதாந்த சபை அமர்வுகள் வலி வடக்கு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.…
டெல்லி குண்டு வெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் – சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்ட…
டெல்லி குண்டு வெடிப்பின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக சட்டமன்றத்தில் அரசியல்வாதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி குண்டு வெடிப்பு
கடந்த நவம்பர் 10 ஆம் திகதி, டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் 15 பேர்…
ஷேக் ஹசீனாவை அழைத்து வர இன்டர்போல் உதவியை நாடும் பங்களாதேஷ்
ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து அழைத்து வர இண்டர்போல் உதவியை பங்களாதேஷ் அரசாங்கம் நாடியுள்ளது பங்களாதேஷில், மாணவர் போராட்டத்தால் ஆட்சி, அதிகாரத்தை இழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து, இந்தியாவில்…
யாழ். விவசாயிகளுக்கு முக்கிய அறிவித்தல்
யாழ். மாவட்டத்தில் நெற்பயிரில் இலை மடிச்சு கட்டி நோய் தாக்கம் உணரப்படும் நிலையில், விவசாயிகள் உரிய காலப் பகுதியில் அருகில் உள்ள விவசாய போதனா ஆசிரியர்களின் ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த விடயத்தை வடக்கு மாகாண பிரதி…
வடக்குக்கு புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா
வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன இன்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத…
கோவில் உண்டியலில் காணிக்கை போட்ட பஸ் நடத்துனருக்கு நேர்ந்த துயரம்
திருகோணமலை , தம்பலகாமம் பாலம்போட்டாறு பகுதியை இணைக்கும் பொலிஸ் சோதனை சாவடியில் பிரதான வீதி அருகில் பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து நடத்துனர் உயிரிழந்த சம்பவம் இன்று (20) காலை இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை, 5ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 41…
ட்ரம்ப் , சல்மான் சந்திப்பு ; உலக அரசியல் தொடர்புகளின் புதிய முயற்சி
ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் படுகொலைக்குப் பிறகு முதன்முறையாக சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்துள்ளார்.
இதன்போது இளவரசருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததுடன், கஷோகியின் கொலை பற்றி…
2026 ஆம் ஆண்டு முதல் வேலணைக்குள் பதிவு செய்யப்படாத நுண் நிதிக்கடன் நிறுவனங்கள் இயங்க தடை
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் 2026 ஆம் ஆண்டு தை மாதம் முதல் சபையின் அனுமதி பெறாத நுண் நிதிக்கடன் நிறுவனங்கள் இயங்கவோ செயற்பாடுகளை முன்னெடுக்கவோ முடியாதென வேலணை பிரதேச சபையால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற சபையின்…
ஜப்பானில் பாலியல் சேவைகளை பெறும் ஆண்களுக்குத் தண்டனை
ஜப்பானில், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களிடமிருந்து பாலியல் சேவைகளை பெறும் ஆண்களுக்குத் தண்டனை வழங்கும் திட்டத்தைப் பரிசீலித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது அந்தநாட்டின் பாலியல் அணுகுமுறையில் ஒரு பெரிய கொள்கை…
அரசியல் கைதியின் பிள்ளைகளை பராமரித்தவர் இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே
அரசியற் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளைப் பராமரித்து வந்த பேத்தியாரான தேவதாஸ் கமலா, இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.…
முன்று குழந்தைகளின் தாயை 143 முறை குத்தி கொலை செய்த 13 வயது சிறுமி
இங்கிலாந்தில், ஒரு 13 வயது மாணவி, மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணை 143 முறை கத்தியால் குத்தி கொலை செய்த பின்னர், தடயங்களை மறைக்க அவரது வீட்டில் தீ வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
மார்ச்…
யாழில். சீரற்ற காலநிலை – 218 பேர் பாதிப்பு ; ஒரு வீடு முற்றாக சேதம்
யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலையால் ,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு வீடு முற்றாகவும் , 06 வீடுகள் பகுதிகளவிலும் சேதமடைந்துள்ளதாக யாழ் . மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்…
யாழில். வாடகைக்கு அறை எடுத்து போதைப்பாவனை – கூண்டோடு கைது
யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு அறை எடுத்து , போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதுடன் , விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு…
17 வருடங்களாக சிறையில் வாடும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார்…
தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர்.
ஆனந்தசுதாகரின் மனைவி 2018 ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார்.
இதனால் அநாதரவாக…
நெடுந்தீவு தொடர்பான சூழல் சுற்றுலா ஆய்வு நூல் வெளியீடு
கியூமெடிக்கா நிறுவனத்தினால் நெடுந்தீவுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு அதன் விபரங்களை உள்ளடக்கிய நூல் வெளியீடு கியூமெடிக்கா சர்வதேச பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜொகானஸ் பீட்டர் தலைமையில் நேற்று(19.11.2025) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்…
சாலையைக் கடக்கும்போது இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
அவுஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி!
இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம் 14ஆம் திகதி இரவு,…
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் தலைவர் டயா லங்காபுர தலைமையில் நேற்று(19.11.2025) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் தகவல் அறியும்…
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவை
யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையானது வேலணை பிரதேச செயலாளர் திரு.தனபாலசிங்கம் அகிலன் தலைமையில் நேற்றுமுன்தினம்(18.11.2025) நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்…
அமைச்சர் பிமல் ரத்நாயக்காவின் பேச்சுக்கு வடமாகாண அழகக சம்மேளனம் கடும் கண்டனம்! –…
வடமாகாணத்திற்குட்பட்ட இடங்களில் இராணுவத்தினரால் வன்னி பகுதியில் ஒரேயொரு சிகை அலங்கரிப்பு நிலையம் மட்டுமே நடாத்தப்பட்டு வருகின்றது என அமைச்சர் பிமல் ரத்நாயக்கா பாராளுமன்றில் தெரிவித்த கருத்துக்கு வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் கடும்…
ஜப்பான் தீவில் கோரத் தீ விபத்து: நாசமடைந்த 170க்கும் மேற்பட்ட கட்டிடங்கள்
ஜப்பான் தென்மேற்குப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 170 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நாசமடைந்துள்ளன.
ஜப்பானில் தீ விபத்து
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் ஓய்தா நகரத்தின் சாகனோசெகி மாவட்டத்தில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த…
ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கொலை செய்த இளைஞர்
ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியை கொலை செய்த இளைஞர்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன்.…