எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பு!!
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் எவ்வித அறிவித்தலும் வெளியிடப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் சூழ்நிலையில்…
விவசாய சட்டங்களை மீண்டும் கொண்டு வரும் திட்டம் அரசிடம் இல்லை – மத்திய விவசாயத்துறை…
பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்து மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பேசியதாவது: ரத்து செய்யப்பட்ட மூன்று விவசாய சட்டங்களை எதிர்காலத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை.…
சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆதாரத்தை கேட்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது – ராகுல்…
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலையொட்டி அம்மாநில பா.ஜ.க.வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அசாம் முதமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பேசியதாவது:
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்…
பிரதமர் மோடி பஞ்சாப்பிற்கு சாலை வழிக்கு பதில் ஹெலிகாப்டரில் வரலாம் – காங்கிரஸ்…
கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஃபெரோஸ்பூர் பகுதியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது.அவர் சாலை வழியே வாகனத்தில் சென்ற போது பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால் தமது பயணத்தை பிரதமர் ரத்துச் செய்தார்.
இந்த சம்பவம்…
ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது!!
சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி ஒன்று ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும்…
இன்று அவ்வப்போது மழை பெய்யும் !!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும்…
இரு மேலதிகாரிகள் சேவையில் இருந்து இடைநிறுத்தம்!!
கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் அதன் போக்குவரத்து முகாமையாளரின் சேவைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அமைச்சர் பந்துல குணவர்தன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இவர்களுக்கு எதிரான…
மங்கள சமரவீரவ பற்றி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியவை…!!
மாத்தறை மாவட்டத்தில் இருந்து அரசியல் களத்தில் இறங்கி 1994 தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்று தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியை வகித்த இளம் அமைச்சரான மங்கள சமரவீரவின் மறைவிற்கு எமது இரங்கலைத்…
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை வழக்கு எதுவும் பதிவு செய்யப் படவில்லை-…
பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, தெரிவித்துள்ளதாவது:
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட குற்றங்கள் பற்றிய தரவுகளை தேசிய குற்ற…
பகவத்கீதை வினாடி-வினா போட்டியில் முஸ்லிம் மாணவி முதலிடம்…!!!
குஜராத் மாநிலத்தில் எட்யூட்டர் செயலி அகில இந்திய அளவில் பகவத்கீதை வினாடி-வினா போட்டியை நடத்தியது.
இந்த போட்டியில் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி குஷ்புகான் முதலிடத்தை பிடித்தார். அவரது தந்தை அப்துல்கான் ஒரு தொழிலாளி…
கோவாவில் இம்முறை அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் – ராகுல் காந்தி…!!
40 தொகுதிகள் அடங்கிய கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன.
பா.ஜ.க. சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட…
நினைவகம் கட்டுவதில் விருப்பமில்லை.. இதனை அரசியல் ஆக்காதீர்கள்- லதா மங்கேஷ்கர் சகோதரர்…
புகழ்பெற்ற இந்திய சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 6-ம் தேதி மும்பையில் மரணம் அடைந்தார். அவரது 75 ஆண்டு கால இசைப் பயணத்தை போற்றும்விதமாக மும்பையில் உள்ள கலினாவில் 2.5 ஏக்கர் நிலத்தில் இசைப் பள்ளி அமைக்கப்படும் என்று மகாராஷ்டிரா…
கேரளாவில் சப்-இன்ஸ்பெக்டரான ஆதிவாசி பெண் – தந்தையின் கனவை நனவாக்கியதாக…
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள மலை கிராமத்தை சேர்ந்தவர் உண்ணி செக்கன்.
உண்ணி செக்கன் பால பிலி, எலிகோ பழங்குடி காலனியில் வசித்து வந்தார். இவரது மகள் சவுமியா. மகள் கேரள போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் சேர வேண்டும் என…
டெல்லியில் 18வது மாடி உச்சியில் கட்டிடம் இடிந்தது- 2 பேர் பலி…!!
டெல்லி புறநகரில் குர்கான் என்ற பகுதியில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அரியானா மாநிலத்துக்குட்பட்ட அந்த பகுதியில் சின்ட்லா பாரடிசோ ஹவுசிங் காம்ப்ளக்ஸ் குடியிருப்பு உள்ளது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 18 மாடிகளுடன் தனி…
கொரோனா முதல் ஊரடங்கில் 3 மாதத்தில் 23 லட்சம் பேர் வேலை இழப்பு- மத்திய அரசு தகவல்…!!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு முழு அடைப்பால் மக்கள்…
ஜெ அம்மாவுக்காக கூட்டு பிரார்த்தனை நடத்தினாங்க…அது ஏன் பலிக்கல? (வினோத வீடியோ )
ஜெ அம்மாவுக்காக கூட்டு பிரார்த்தனை நடத்தினாங்க...அது ஏன் பலிக்கல?
உதடுகள் சிவப்பாக மாற சில வழிகள்!! (மருத்துவம்)
சிலருக்கு உதடுகள் கருமையாக இருப்பது பெரும் கவலையாக இருக்கும். அதனை போக்க, பீட்ரூட் சாறு அல்லது புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறிவிடும்.
மருத்துவ குணம் அதிகம் நிறைந்த தேன், உதட்டில் உள்ள…
மங்கள ஒரு கடுமையான விமர்சகர்!!
இலங்கை அரசியலில் அழியாத நினைவுகளை விட்டுச் சென்ற அரசியல்வாதியாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவைக் குறிப்பிடலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குறித்து இன்று (11) பாராளுமன்றத்தில்…
“பாராளுமன்ற ஒழுங்கு விதிகள்” பிரதமரிடம் வழங்கிவைப்பு!!
“பாராளுமன்ற ஒழுங்கு விதிகள்” மதிப்பாய்வு நூலின் இரண்டாவது தொகுப்பு பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க அவர்களினால் இன்று (11) பாராளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கிவைக்கப்பட்டது.…
1,259 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!
நாட்டில் இன்றைய தினம் 1,259 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 625,804 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கான மேலும் 31 பேர் சிகிச்சை…
வவுனியா கனகராயன்குளத்தில் காருடன் பேரூந்து மோதுண்டு விபத்து : ஜவர் காயம்!! (படங்கள்)
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (11.02.2022) மதியம் காருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஜவர் காயமடைந்துள்ளனர்.
இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி…
2 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!!
வத்தளையில் 2 கிலோ 579 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளினால்…
இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு தேவை!!…
இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புத்திஜீவிகள், சிவில் சமூகங்களின் ஒத்துழைப்பு தேவை என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.…
அகில இலங்கை சாசனாரக்ஷக சபை பிரச்சினைகளை தீர்க்குமாறு அறிவுறுத்தல்!!
அகில இலங்கை சாசனாரக்ஷக சபையில் தற்போது நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (10) பிற்பகல் பிரதமரின் செயலாளர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட…
கல்முனை பொலிஸ் நிலையத்தில் புதிய ஆண்டிற்கான பரிசோதனை!!
கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் புதிய ஆண்டிற்கான பரிசோதனை கல்முனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த புத்திகவின் நெறிப்படுத்தலில் நேற்று கல்முனை பொலிஸ்…
பொரளை குண்டு தொடர்பில் சரத் வீரசேகர தகவல் !!
அண்மையில் பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்வதை யாரும் தவறு என்று கூற முடியாது. இன்னும் விசாரணைகள் முடியவில்லை. எனவே…
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு !!
கண்டியில் இருந்து பதுளை நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயில், வட்டவளை ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று(11) காலை தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாக, மலைநாட்டு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம்…
இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை !!
கனடாவில் வேலை வாய்ப்பு என சமூக ஊடகங்களில் இடம்பெற்று வரும் போலியான ஆட்சேர்ப்பு மோசடி தொடர்பில் இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் உயர் ஸ்தானிகராலயம் தனது ஒரு ட்விட்டர் செய்தியில்…
வழக்குகளை விரைவாக தீர்க்க சட்டத்தில் திருத்தம்!
குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன் விசாரணை முறையை ( Justice Ministry is planning to introduce a pre-trial method which would limit delays in law.) அறிமுகப்படுத்துவதற்கு…
மட்டக்களப்பில் கடும் மழை!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் பெரும்போக அறுவடையும் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று தொடக்கம் கடுமையான மழை பெய்து…
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது வழித்தட திட்ட அறிக்கை – மத்திய அரசு…
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கம் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் மூன்று மெட்ரோ ரயில் பாதைகளை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை…
கழுத்தில் சிக்கிய டயருடன் 6 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதலைக்கு விடிவு…!
இந்தோனேசியாவில் சுலாவேசி மாகாணம் பலூ நகரில் உள்ள ஆற்றில் வாழ்ந்து வரும் ஒரு முதலையின் கழுத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தின் டயர் சிக்கியது. முதலை வளரும் போது டயர் கழுத்தை இறுக்கி முதலை இறக்க கூடும் என மக்கள் அச்சப்பட்டனர்.…
’சந்தர்ப்பங்களை கூட்டமைப்பு தவறவிட்டுள்ளது’ !!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்குக் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் தவறவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் குற்றம்சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (10) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,…
புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் நியமனம் !!
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற்றுள்ளார்.
அமெரிக்காவின் மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான முன்னாள் உதவி இராஜாங்க செயலாளர் இவர் செயற்பட்டிருந்தார்.
அத்தோடு, கம்போடியா அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும்,…