;
Athirady Tamil News

3 பொருட்களின் விலைகள் குறைப்பு !!

மூன்று பொருட்களின் விலைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. அதன்பிரகாரம் டின்மீன் 490 ரூபாய், பெரிய வெங்காயம்-97 ரூபாய் மற்றும் கோதுமை மா ஒரு கிலோகிரம் 225 ரூபாய்க்கு கொள்வனவு செய்துக்கொள்ள முடியும்.

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரித்தல் !! (மருத்துவம்)

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிப்பதில், பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும். எப்போதும் குழந்தைகளுக்கு, அவர்கள் படித்தவுடன் எழுதிப் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதிலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். எனவே,…

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைக்கூலிகள்: நாமல் திட்டவட்டம் !!

ராஜபக்‌ஷக்களை அதிகாரத்திலிருந்து நீக்குவது மூன்றாம் தரப்பின் சதிச் செயல் என்று பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு நபரும் மூன்றாம் தரப்பு சதியாளர்களின் கைக்கூலிகள். இதைப் பற்றி மக்கள்…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்: தடையால் தாமதமாகும் !!

நீதிமன்ற விடுமுறை காரணமாக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து நீதிமன்றத்துக்கு செல்வதற்கு உள்ள தடைகளை கருத்திற்கொண்டு, அதை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை இன்னும் சில வாரங்களுக்கு பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள்…

மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோனி மகன் பாஜகவில் இணைந்தார்!!

மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் ஏ.கே.அந்தோனி. இவர் முன்னாள் ராணுவ மந்திரியாக பதவி வகித்தவர். சமீபத்தில் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பி.பி.சி. சேனல் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளது.…

கனடாவில் இந்து கோவில் மீது வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் வாசகம் – இந்தியா…

வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. சமீப காலமாக இந்து மத ஸ்தலங்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில்…

அதிகரிக்கும் கொரோனா – மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய மந்திரி நாளை…

இந்தியாவில் ஒருநாள் கொரோனா நேற்று 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்று 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23,091-ல் இருந்து 25,587ஆகவும் அதிகரித்துள்ளது.…

பஞ்சாப் தேர்தலுக்கு மீண்டும் சிக்கல்… உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்து பாகிஸ்தான்…

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மற்றும் பாதுகாப்பு சிக்கல் காரணமாக பஞ்சாப் மாகாண சட்டசபை தேர்தல் நடத்துவதை அரசு தாமதம் செய்தது. ஏப்ரல் 10ஆம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் அக்டோபர் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க…

ட்ரம்ப் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி: ரூ.1 கோடி வழங்க நடிகை ஸ்டார்மிக்கு உத்தரவு!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தொடுத்த அவதூறு மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ட்ரம்புக்கு ரூ.1 கோடி வழங்க உத்தரவிட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான…

40 எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் விற்பனை இடைநிறுத்தம்!!

40 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விற்பனையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். QR குறியீட்டை மீறி தொடர்ச்சியாக எரிபொருள் விற்பனை செய்யும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில்…

தம்புள்ளையில் மரக்கறி விற்பனையில் வீழ்ச்சி!!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு விற்பனையாளர்கள் இன்மையால் 06 நாட்களாக விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டினர். தம்புள்ளை பொருளாதார மத்திய…

நான்கு பிள்ளைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு ஊக்க தொகை வழங்கும் செயற்திட்டத்தை சைவ மகா சபை…

நான்கு பிள்ளைகளுக்கு மேல் பெற்று , தமிழில் பெயர் வைக்கும் தம்பதியினருக்கு ஊக்க தொகை வழங்கும் செயற்திட்டத்தினை சைவ மகா சபை பங்குனி உத்தர நாளான நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பித்துள்ளது. அந்நிலையில் சமய, சமூக, மது ஒழிப்பு செயற்பாட்டாளரான…

வங்கி மோசடியில் 74 வயதான முன்னாள் ஏஜிஎம்.க்கு 3 ஆண்டு சிறை!!

பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் கடன் வழங்கி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் உதவிப் பொது மேலாளர் திலீப் தேஷ் பாண்டே (74) மற்றும் 8 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த…

மின்சாரம் தாக்கி கொக்குவில் இந்து மாணவன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரி உயர்தர மாணவன் நேற்றைய தினம் புதன்கிழமை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான். கொக்குவில் குளப்பிட்டியை சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் (வயது 17) எனும் மாணவனே உயிரிழந்துள்ளான். தனது வீட்டில் மின்…

மட்டக்களப்பு – மன்முணை மேற்கு – விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தின்…

மட்டக்களப்பு - மன்முணை மேற்கு - விளாவட்டவான் விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று இடம்பெற்றது. இன்று காலை 9 மணிக்கு விளாவட்டவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் நவரெத்தினம் நவேந்திரகுமார்…

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம்: ஐ.நா. ஒட்டெடுப்பில் இருந்து இந்தியா விலகல்!!

ஐ.நா அமைப்பில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்படும் அனைத்து தீர்மானங்களின் மீதான ஓட்டெடுப்பில் இருந்து இந்தியா விலகியே இருந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் போரில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதாகவும், ரஷ்யாவின் நடவடிக்கையால் சர்வதேச…

இம்மாத இறுதியில் தொடங்குகிறது பத்ரிநாத், கேதர்நாத் யாத்திரை!!

இந்தியாவில் சார் தாம் யாத்திரை என்று அழைக்கப்படும் பாத யாத்திரை இந்த மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில், நாட்டின் 4 புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்கு பக்தர்கள் செல்ல தயாராக உள்ளனர். ஆண்டுதோறும்…

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு அடுத்த மாதம் முடிசூட்டு விழா!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் கடந்த ஆண்டு அரியணை ஏறினார். அவர் அரியணையில் ஏறினாலும் அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது.…

காஷ்மீரில் போலீஸ் காவலில் இருந்து பயங்கரவாதிகள் தப்பி ஓட்டம்!!

ஜம்மு- காஷ்மீரில் மதுபான கடையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மரூப் நாசீர், சகீத் சவுகத் ஆகிய 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருந்தனர். இருவரும் லஷ்கர்-இ-ெதாய்பா அமைப்பை சேர்ந்தவர்கள். கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து அவர்கள்…

கைது செய்யப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஆவேசம்: ‘‘அழிப்பவர்களிடமிருந்து நாட்டை…

நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் டிரம்ப், ‘’அழிக்க நினைப்பவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற நினைத்ததே நான் செய்த ஒரே குற்றம்,’’ என்று ஆவேசமாக பேசியுள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016ம் ஆண்டு…

மாற்றுத் திறனாளியின் குடும்பத்திற்க்கு வீடு கையளிக்கப்பட்டுள்ளது!! (PHOTOS)

விபத்து சம்பவம் ஒன்றினால் மாற்றுத்திறனாளியான குடும்ப தலைவரை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு புலம்பெயர் தம்பதியினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிதி அனுசரணையில் , இராணுவத்தினரின் பங்களிப்புடன் வீடொன்று கட்டி , கையளிக்கப்பட்டுள்ளது.…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல முன்வைப்பு ஒத்திவைப்பு!!

பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்படவிருந்தது. எனினும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில் அதனை இன்று முன்வைப்பதில்லை என்று தீர்மானித்துள்ளதாக, நிதியமைச்சர் விஜயதாச…

மாதகலில் பட்டப்பகலில் வீடு உடைத்து நகைகள் திருட்டு!!

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து 09 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வசிப்போர் அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் , நேற்றைய தினம் புதன்கிழமை தொழில் நிமிர்த்தம் அவர்கள் வெளியில் சென்ற வேளை…

யாழில். கிணற்றில் தண்ணீர் அள்ளும்போது கிணற்றினுள் விழுந்தவர் உயிரிழப்பு!!

தண்ணீர் அள்ளும் போது கிணற்றினுள் தவறி வீழ்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த முத்துக்குமார் , அப்புத்துரை (வயது 73) என்பவரே உயிரிழந்துள்ளார். வீட்டு கிணற்றில் நேற்றைய தினம் புதன்கிழமை…

வடக்கு உள்ளிட்ட 6 மாகாணங்களுக்கு புதிய ஆசிரியர்கள்!!

வடக்கு உள்ளிட்ட ஆறு மாகாணங்களில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இளங்கலை பட்டதாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு…

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக சிவப்பு சமிஞ்ஞை!!

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் எரிபொருள்…

2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அசாம் செல்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!!

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதல் அசாம் மாநிலத்தில் 8ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் 8ம் தேதியன்று (சனிக்கிழமை) தேஜ்பூர் விமானப்படை நிலையத்தில் இருந்து போர் விமானத்தில் (சுகோய் 30…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,834,064 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.34 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,834,064 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 684,339,357 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 657,307,727 பேர்…

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம்: நடிகர் சுதீப் பரபரப்பு பேட்டி!!

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா கட்சி தயாராகி வருகிறது. இந்தநிலையில், பிரபல கன்னட நடிகர் சுதீப்பை பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்தது.…

உடல் எடை குறைப்பு சிகிச்சையால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்!!

ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் ஷானன் போவ் (28). இவர் தனது உடல் எடையை குறைப்பதற்காக துருக்கியில் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். சிகிச்சையின் ஒரு பகுதியாக பெண்ணிற்கு இரைப்பை பேண்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரப்பை பேண்ட் அறுவை சிகிச்சை…

என்னை கொல்ல உத்தவ் தாக்கரே கூலிப்படையை ஏவினார்: நாராயண் ரானே குற்றச்சாட்டு!!

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவருமான உத்தவ் தாக்கரே தன்னை கூலிப்படையை ஏவி கொலை செய்ய சதி செய்ததாக பா.ஜனதாவை சேர்ந்த மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை மந்திரி நாராயண் ரானே நேற்று பரபரப்பு…

திரைப்பட இயக்குனராக அறிமுகமாகும் ஒபாமாவின் மகள் மலியா!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மூத்த மகள் மலியா ஒபாமா திரைத்துறையில் விரைவில் கால் பதிக்க உள்ளார். டொனால்ட் குரோவர் தயாரிக்கும் குறும்படத்தை மலியா ஒபாமா விரைவில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலியா ஒபாமா தனது சொந்த…

அடுத்த சட்டமன்ற தேர்தலில் தானேயில் போட்டியிடுவேன்: ஆதித்ய தாக்கரே!!

உத்தவ்தாக்கரே கட்சியின் மகளிரணியை சேர்ந்த ரோஷிணி ஷிண்டே, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் மனைவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இதுபற்றி அறிந்த ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த மகளிர் அணியினர் அவரை…