;
Athirady Tamil News

கித்துள் மரமேறியவர் மரத்திலேயே மரணம்!!

கித்துள் மரத்தில் ஏறிய கள் இறக்குபவர் மரத்திலேயே உயிரிழந்ததுடன் பொது மக்களின் உதவியுடன் பொலிஸார் சடலத்தைக் கீழே இறக்கிய சம்பவம் ஒன்று பிட்டிகல பகுதியில் பதிவாகியுள்ளது. உயிரிழந்த நபரான 63 வயதான ரணசிங்க வீரக்கொடி பிட்டிகல, பொரொகம…

மஞ்சளும் விலையைக் குறைத்தது!!

லிட்ரோ நிறுவனம் எரிவாயு சிலிண்டரின் விலையைக் குறைத்ததையடுத்து லாஃப் நிறுவனமும் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக லாஃப் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இன்று (04) நள்ளிரவு முதல் குறித்த…

கல்வி தகுதியை பிரதமர் மோடி மறைக்கும் மர்மம் என்ன?: சஞ்சய் ராவத் கேள்வி!!

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் கேட்டு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து குஜராத் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த…

வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்: அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் கூட்டு போர் பயிற்சி!!

வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலுக்கு எதிராக தென்கொரியா, அமெரிக்கா ஜப்பான் கடற்படைகள் இணைந்து நீர்மூழ்கி கப்பல் பயிற்சியை நேற்று தொடங்கின. வடகொரியாவின் மிரட்டலானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறைந்த இடைவெளியில் அதிக எண்ணிக்கையிலான…

திருப்பதி கோவிலில் இன்று தங்க தேரோட்டம் நடக்கிறது!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் 3 நாள் வருடாந்திர வசந்த உற்சவம் தொடங்கியது. மலையப்பசாமிக்கு வசந்த காலத்தில் நடக்கும் விழாவுக்கு 'வசந்தோற்சவம்' எனப் பெயர். சூரியனின் உஷ்ணத்தில் இருந்து இறைவனை தணிக்கும் விழா…

பின்லாந்து நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் சன்னா மரீன் கட்சி தோல்வி!!

பின்லாந்து தேர்தலில் பிரதமர் சன்னா மரீனின் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. எதிர்க்கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பின்லாந்தில் பிரதமராக சன்னா மரீன் ( 37)பதவி வகிக்கிறார். மிக இளம் வயதில் பிரதமர் பதவிக்கு வந்த அவர் மக்களிடையே…

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 126-வது இடம்!!

ஐக்கிய நாடுகளின் நிலைத்த மேம்பாட்டு தீர்வுகள் வலையமைப்பில், 2023-ம் ஆண்டு உலக மகிழ்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டது. தமது மகிழ்ச்சி குறித்த மக்களின் சொந்த மதிப்பீடு, சமூக, பொருளாதார தகவல்கள் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டிருந்தது.…

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க அதிரடி படை: இங்கி. பிரதமர்…

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்க புதிய அதிரடிப் படையை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்துள்ளார். இங்கிலாந்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன.…

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!!

இந்த வருடத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இலங்கைக்கு 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார். மார்ச் மாதத்தில் நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 125,495 ஆகும்.…

ரூ. 1,000க்கு மேல் காஸ் விலை குறைப்பு!!

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ. 1005 ஆல் குறைக்கப்படுகிறது என லிட்ரோ லங்கா தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ.3728 ஆகும். 5…

அள்ளி எடுக்கும் எம்.பிகள்: வாயை பிளக்கும் மக்கள்!!

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் ( மாதாந்த அடிப்படையில் ) சம்பளம் பிரதமர் 71,500 சபாநாயகர் 68,000 பிரதி சபாநாயகர் 63,500 அமைச்சரவை அமைச்சர்கள் 65,000 இராஜாங்க அமைச்சர்கள் 65,000 எதிர்க்கட்சி…

சஜித் அணியில் பிளவு: ரணிலுடன் மூவர் இணைவர்!!

எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. அவ்வணியைச் சேர்ந்த மூவர், ஜனாதிபதி ரணிலுடன் இணைந்துகொள்ள விருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்பிரகாரம், ஹர்ஷ டி சில்வா,…

கலாசாலையில் இடம்பெற்ற நாடகநூல் வெளியீட்டு விழா!! (PHOTOS)

கலாசாலையில் இடம்பெற்ற நாடகநூல் வெளியீட்டு விழா கோப்பாய் ஆசிரியர் கலாசாலை நாடகத் துறை விரிவுரையாளர் சந்திரிகா தர்மரட்ணம் எழுதிய கூடி வாழ்வோம் என்ற நாடக நூலின் வெளியீட்டு விழா 03.04.2023 திங்கள் பிற்பகல் 2 மணிக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலை…

இருபாலை சிறுவர் இல்ல விவகாரம் – அருட்சகோதரி உள்ளிட்ட மூவர் விளக்க மறியலில்!

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் சிறுவர் இல்லம் ஒன்றினை நடத்தியமை மற்றும் அங்கிருந்த சிறுவர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் அருட்சகோதரி உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இருபாலை பகுதியில்…

சட்டசபை தேர்தலுக்காக கர்நாடகத்தில் 3 நாட்கள் முகாமிட பிரதமர் மோடி திட்டம்!!

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் தான் பா.ஜனதா பலம் வாய்ந்து இருக்கிறது. இதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள…

மலேசியாவில் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்ய பாராளுமன்றம் ஒப்புதல்!!

மலேசியாவில் கொலை, பயங்கரவாத செயல் உள்ளிட்ட பல்வேறு குற்றசெயல்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த மரண தண்டனை சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, கட்டாய மரண தண்டனையை ஒழிப்பதற்கு வகை செய்யும் சட்டமசோதா உருவாக்கப்பட்டது.…

உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியல் – பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்!!

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலை 'தி மார்னிங் கன்சல்ட்' நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். தி மார்னிங் போஸ்ட் தகவலின் படி உலகில் மிக பிரபலமான தலைவர்கள் தரவரிசையில் பிரதமர்…

காங்கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி!!

காங்கோ நாட்டின் மசிசி மாகாணத்தின் பொலொவா கிராமத்தில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள் மற்றும் சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமானவர்களை தேடி வருகிறோம் என…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை !!

நாட்டில் தொடரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 19000 இற்கும் அதிக டெங்கு…

மக்களின் குரல்களை நசுக்கும் முயற்சி !!

தற்போதைய அரசாங்கம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முன்வைத்து, துன்பப்படும் மக்கள் தமது கோரிக்கைகளுக்காக குரல் எழுப்பும் போது, அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி மனித உரிமைகளை நசுக்கி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு !!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன், மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வட மத்திய…

கொழும்பு திண்ம கழிவு திட்டத்துக்கு அனுமதி !!

கொழும்பு மாநகரப் பகுதியுடன் தொடர்புடைய திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டத்தை அரச மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் நிலைபேறான முறையில் நடத்துவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட…

ரஷ்ய கப்பல்களை கைப்பற்ற மாட்டோம் !!

மேற்கத்தேய நாடுகளின் பொருளாதார தடைகள் காரணமாக ரஷ்யக் கப்பல்கள் கைப்பற்றப்படாது என்பதுடன், பணியாளர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை இலங்கை அரசாங்கம் ரஷ்ய அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்…

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !!

2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி செயற்பாடுகள் இன்றுடன் (04) நிறைவு பெறுகின்றன. அதற்கமைய, இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. தமிழ் - சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு பாடசாலை…

கலாஷேத்ரா விவகாரம்- செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு !!

மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மத்திய, மாநில மகளிர் ஆணையம் சார்பில் நேரடியாக விசாரணை…

டிக் டாக் செயலிக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதிப்பு!!

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து அரசு அலுவலக செல்போன்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி அந்நாட்டு அரசு இந்த…

மரத்தில் இருந்து இறந்து விழுந்த வவ்வால்கள்- வனத்துறை, சுகாதாரத்துறையினர் ஆய்வு!!

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த மரங்களில் வவ்வால்கள் தலைகீழாகதொங்கி வருகிறது. பகல் நேரங்களில் தலைகீழாக தொங்கும் வவ்வால்கள் இரவு நேரங்களில் பறந்து திரியும்.நாகர்கோவில் ராணி தோட்டம் டெப்போ பகுதியில் 3 பழமை வாய்ந்த மரம் உள்ளது.…

3 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெறும் சுற்றுலா தலங்கள்: சீனாவில் 1300 ஆண்டுகள் பழமையான…

சீனாவில் 1300 ஆண்டுகள் பழமையான தண்ணீரில் மிதக்கும் உஷன் நகரம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சீனாவில் கொரோனா தொற்றால் முடங்கிய சுற்றுலா தளங்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்றன. அந்த வகையில்…

சினிமாவை மிஞ்சும் பரபரப்பு- தங்கம், வெளிநாட்டு பணத்துடன் வாலிபரை கடத்திய 8 பேர் கும்பல்!!

திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதனை தடுக்க வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தினமும்…

108 ஆம்புலன்ஸ் வர கால தாமதம் ஆனதால் 4 மாத கர்ப்பிணி பலி!!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே மணக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் சந்தியா (வயது 25). இவருக்கும் விழுப்புரத்தை அடுத்த சத்தியகண்டநல்லூரை சேர்ந்த திருமலை என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் ஆனது. இதில் கருவுற்ற சந்தியா…

புடினின் அணுவாயுதம் – வெடித்தால் சூரியன் தெரிய 5 வருடங்கள் எடுக்கும்!

உலகிலேயே ரஷ்யாவிடம்தான் மிகவும் சக்திவாய்ந்த அணுகுண்டுகள் இருக்கின்றன. உலகிலேயே மிக அதிகமாக அணுகுண்டுகளை தயாரித்து வைத்திருக்கின்ற நாடும் ரஷ்யா தான். ரஷ்யாவிடம் 5,977அணுகுண்டுகள் இருப்பதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. உலகத்தில் இதுவரை…

மேட்டூர் அருகே மர்ம விலங்கு கடித்து 6 ஆடுகள் பலி!!

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த ஜலகண்டாபுரம் அருகே உள்ள தர்ம கிணறு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற செம்மறி ஆடுகளை, வழக்கம் போல் இரவு வீட்டின் அருகே உள்ள…

உக்ரைனின் திடீர் தாக்குதல் – ரஸ்யா இழந்த பிரபல இராணுவ பதிவர் !!

ரஸ்யாவின் சென் பீற்றர்ஸ்ட் பெர்க் சதுக்கத்தில் உள்ள விடுதியில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ரஸ்யாவின் பிரபலமான இராணுவ பதிவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு பின்னால் உக்ரைன் இருப்பதாக ரஸ்யா குற்றம் சாட்டியுள்ளது.…

யாழ்.மத்திய கல்லூரியின் கீதத்தை மாற்றவேண்டும்! அமைச்சர் டக்ளஸ் யோசனை!!

யாழ்.மத்திய கல்லூரியின் கல்லூரி கீதத்தை அனைவருக்கும் விளங்கும் வகையில் மாற்ற வேண்டும் என கடற்தொழில் அமைச்சரும், யாழ்.மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்ற…