;
Athirady Tamil News

நிலவில் இன்னும் அழியாத ஆம்ஸ்ட்ராங் கால் தடம் – மனிதனின் அடுத்த காலடி எப்படி இருக்கும்? (கட்டுரை)

0

நிலவில் 1969 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளின் வாக்கில் கால் பதித்த 12 விண்வெளி வீரர்களின் கால்தடங்கள் இன்னும் அழியவில்லை.

அந்த கால்தடங்களை அழிப்பதற்கு அங்கு காற்றோ மழையோ இல்லை; எனவே மேலும் பலநூறு ஆண்டுகளுக்குக்கூட அந்த கால்தடம் அழியாமல் இருக்கலாம்.

தற்போது நாசா நிலவின் தென் துருவத்திற்கு புதிய விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதால் மேலும் சில அழியா கால்தடங்கள் நிலவில் பதியக்கூடும். ஆனால் 50 வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக நிலவில் பதியப்போகும் கால் தடம் எப்படி இருக்கும்? அப்பலோ விண்வெளி வீரர்களின் கால்தடங்களில் இருந்து அவை எவ்வாறு மாறுபடும்?

நாசா மற்றும் அதன் வர்த்தக கூட்டணி நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான நிலவில் அணியக்கூடிய காலணிகளை (பூட்ஸ்களை) தயாரிப்பதில் பல வருடங்களை செலவிட்டன. ஆர்டிமிஸ் என்ற திட்டத்தின் மூலம் 2025ஆம் ஆண்டு நான்கு புதிய விண்வெளி விரர்கள் நிலவில் கால்பதிக்கவுள்ளனர்.

அவர்கள் அணியும் காலணிகள் அப்போலோ விண்வெளி வீரர்களின் பூட்ஸ்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அதுவே அதிக பள்ளம் மேடுமாக இருக்கக்கூடிய நிலவின் தென் துருவத்தில் விண்வெளி வீரர்களுக்கு சௌகரியத்தையும், பாதுகாப்பையும் வழங்கும்.

விண்வெளி வீரர்களின் கால்தடங்களில் புதுவிதமான சாதனங்களையும் தொழில்நுட்பங்களையும் பொருத்துவதில் பொறியாளர்கள் எந்த அளவிற்குக் கவனம் செலுத்தி வருகிறார்களோ அந்த அளவிற்கு அந்த காலணிகள் ஏற்படுத்தும் தடத்தின் மீதும் கவனம் செலுத்துகின்றனர். முன்னர் சொன்னதுபோல இந்த கால்தடங்களும் பல நூறு ஆண்டுகளுக்கு நிலவின் மேற்பரப்பில் நிலைத்திருக்கக்கூடியது அல்லவா!

முதன்முறையாக நிலவில் கால்பதித்தவர்களின் தடங்கள் எப்படி சட்டென கண்டறியும்படி உள்ளதோ அதேபோல இதுவும் இருக்க வேண்டும் என்றும் பொறியாளர்கள் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“ஒவ்வொரு தனிநபர்களுக்கும் பொருந்தும் காலணிகளை உருவாக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்” என சாக் ஃபெஸ்டர் தெரிவித்தார்.

“ஒவ்வொரு தனிநபர்களுக்கும் பொருந்தும் காலணிகளை உருவாக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்” என சாக் ஃபெஸ்டர் தெரிவித்தார்.

இருப்பினும் காலணிக்கென்று இருக்கும் சில அடிப்படை அம்சங்கள் நிச்சயமாக அதில் இருக்கும் என்கிறார் நாசா ஜான்சன் விண்வெளி மையத்தின் விண்வெளி ஆடை வடிவமைப்பு பொறியாளர் சாக் ஃபெஸ்டர். இவர்தான் விண்வெளி வீரர்களின் காலணியை வடிவமைக்கும் திட்டத்தை வழிநடத்துகிறார்.

“இந்த காலணிகள் ‘க்ரிப்’ ஆக இருக்க வேண்டியது மிக அவசியம்; நிலவின் கரடுமுரடான பரப்பில் மட்டுமல்ல, உலோக பரப்பில், ஏணிகளில், ரோவர்களிலும் கூட ‘க்ரிப்’ஆக நடப்பதற்கு ஏற்ற மாதிரிதான் இந்த காலணிகள் வடிவமைக்கப்படும் ஆனால் அதே சமயத்தில் இந்த காலணிகளின் தடங்கள் நீண்ட வருடங்களுக்கு அழியாமல் இருக்கும் ஒரு நினைவுச் சின்னமாக இருக்கும் என்பதையும் நாங்கள் மனதில் வைத்து கொள்கிறோம்,” என்கிறார் சாக்.

ஆர்டிமிஸ் திட்டத்தில் விண்வெளி வீரர்கள் அணியும் மொத்த உடையையும் ஆக்சியம் ஸ்பேஸ் என்ற நிறுவனமே வடிவமைக்கவுள்ளது.

இந்த ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனம் இந்த வருடத்தின் தொடக்கத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தனியார் விண்வெளி வீரர்களை இரண்டாவது முறையாக அனுப்பியது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட புதிய விண்வெளி ஆடைகளில் முக்கிய அம்சம் அதில் சேர்க்கப்பட்டிருந்த காலணிகள்தான். இருப்பினும் அந்த காலணிகள் எவ்வாறு இருக்கும் என்ற விரிவான படம் இனிமேல்தான் வெளியிடப்படும்.

ஆனால் இந்த காலணிகளில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என நாசாவால் வெளியிடப்பட்ட ஆய்வு சில தகவல்களை நமக்கு அளிக்கின்றன.

நிலவில் 1969 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளின் வாக்கில் கால் பதித்த 12 விண்வெளி வீரர்களின் கால்தடங்கள் இன்னும் அழியவில்லை

அப்போலோ திட்டத்துடன் ஒப்பிட்டால் இந்த விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ள வேண்டிய வெப்பநிலைதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஏனென்றால் அப்பலோ திட்டம் நிலவின் துருவப் பகுதியில் சம தளமாக இருக்கும் பகுதியில்தான் பெரும்பாலும் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அர்டிமிஸ் 3 நிலவில் தரையிறங்கும்போது விண்வெளி வீரர்கள் நிலவில் உள்ள தென் துருவத்தில் ஒரு வித்தியாசமான சூழலை அடைய வேண்டி வரும்.

அதில் சில பகுதிகள் நிரந்தரமாக நிழல் படர்ந்த பகுதிகள். அதாவது ஆயிரம் ஆண்டுகளாக அங்கு சூரியனின் பார்வையே படவில்லை. என்கிறார் சாக் ஃபெஸ்டர். அதில் சில பகுதிகளின் வெப்பநிலை 48 டிகிரி கெல்வினுக்கும் அதாவது மைனஸ் 225 செல்ஷியஸ் வரை செல்லக்கூடும்.

எனவே காலணிகள் கதகதப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்படும். இதற்கான ஆராய்ச்சிகளை நாசாவும் ஆக்ஸியம் நிறுவனமும் மேற்கொண்டு வருகின்றன.

“அப்போலோ சமயத்தில் இல்லாத புதிய நவீன சாதனங்கள் தற்போது வடிவமைக்கப்பட்டு காலணியில் பயன்படுத்தப்படும்,” என்கிறார் ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரசல் ரால்ஸ்டன்.

“நிலவின் தென் துருவத்தில் நிலவும் அதீத குளிரான சூழ்நிலையை தாங்கும் நோக்கில் பல தனித்துவமான பொருட்களைக் காலணிகளின் தயாரிப்பில் பயன்படுத்தியுள்ளோம்.”என்றார் அவர்.

அதேசமயம் பூட்ஸ்களை கதகதப்பாக வைத்துக்கொள்ளும் செயல்முறைகளுக்காக பேட்டரிகள் போன்ற அதிக எடை கொண்ட சாதனங்களை அதில் பொருத்தினால் காலணிகளின் எடை கூடி அது வீரர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் என்கிறார் சாக் ஃபெஸ்டர்.

விண்வெளி வீரர்கள் நிலவில் நீண்ட நாட்கள் தங்க வேண்டும் என்ற காரணத்தினாலும், எதிர்கால திட்டங்களுக்கு அங்கு ஒரு நிரந்தர தலத்தை அமைக்க வேண்டும் என்பதாலும் கூடுதலான எடை விண்வெளி வீரர்களுக்கு சிரமத்தையே கொடுக்கும்.

ஆர்டிமிஸ் திட்டத்தில் முதன்முறையான பெண் விண்வெளி வீரர் களமிறங்குகிறார். இதன் பொருள் வெவ்வேறு அளவுகளில் காலணிகள் தயாரிக்கப்பட வேண்டும் என்பதாகும். அப்போலோ திட்டத்தில் கிட்டதட்ட அனைத்து வீரர்களும் ஒரே உயரத்தில், வயதில் எடையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஒவ்வொரு தனிநபர்களுக்கும் பொருந்தும் காலணிகளை உருவாக்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்” என சாக் ஃபெஸ்டர் தெரிவித்தார்.

அப்போலோ சமயத்தில் பயன்படுத்தியதைக் காட்டிலும் தற்போதைய காலணிகள் அதிக சௌகரியமாகவும், அணிவதற்கு எளிதாகவும் இருக்கும் என ரால்ஸ்டன் தெரிவித்தார். திட்டம் தொடங்குவதற்கு முன்பாக இந்த காலணிகளை அணிந்து வீரர்களுக்கு பல நாட்கள் பயிற்சிகளும் வழங்கப்படும்.

“அதேபோல அனைத்து நேரங்களிலும் தொழில்நுட்ப ரீதியாகத்தான் தீர்வை பெற வேண்டும் என்பதில்லை. தனிப்பட்ட முறையில் ஆறு மணிநேரங்களுக்கு மேலான பணி என்றால் நான் இரண்டு சாக்ஸை அணிந்து கொள்வேன்,” இம்மாதிரியாக தனிநபர்களுக்கு ஏற்ற மாதிரி தீர்வுகளை கண்டறியலாம்”. என்கிறார் ஃபெஸ்டர்

அதேபோல மற்றொரு சவாலான விஷயமும் விவாதிக்கப்படுகிறது. அதாவது நிலவில் சமதளமற்ற பரப்பில் படிந்துள்ள தூசி வெவ்வேறு வடிவங்களில் கூர்மையானதாக இருக்கும். எனவே மேற்பரப்பு மிகவும் சொறசொறப்பாக இருக்கும். அதேபோல அந்த தூசிகள் மின்னூட்டத்தை கொண்டிருக்கும். இதனால் அந்த தூசிகள் எளிதாக ஒட்டிக் கொள்ளும். மின் சாதனங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஆர்டிமிஸ் திட்டத்தில் விண்வெளி வீரர்கள் அணியும் மொத்த உடையையும் ஆக்சியம் ஸ்பேஸ் என்ற நிறுவனமே வடிவமைக்கவுள்ளது.

எனவே தற்போது காலணிகளில் மின்னூட்டங்கள் கொண்ட தூசிகள் ஒட்டாமல் இருக்கும் வகையில் காலணிகள் வடிவமைக்கப்படுகின்றன.

சரி அப்படி என்றால் இந்த காலணிகள் ஏற்படுத்தும் தடங்கள் எப்படி இருக்கும்?

அப்பலோ விண்வெளி வீரர்கள் கனமான ஓவர்பூட்ஸ்களை அணிந்திருந்தனர். அவை அவர்களின் விண்வெளி ஆடையின் ஒரு பகுதியாக இருந்த மெல்லிய ஷூவுடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்த பூட்ஸ்கள்தான் நிலவில் கால்தடங்களை ஏற்படுத்தியது. இந்த பூட்ஸ்கள் நிலவிலேயே விட்டு விடப்பட்டது.

தற்போதைய திட்டத்திற்கான காலணிகள் ஓவர்பூட்ஸ்களை போல வடிவமைக்கப்படுமா என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த காலணிகள் குறித்து ரால்ஸ்டன் எந்த தகவல்களையும் வெளிப்படையாக செல்லவில்லை என்றாலும் க்ளூ ஒன்றை கொடுத்துள்ளார். அது, நிலவுக்கு மனிதர்கள் திரும்பி வந்ததைக் குறிக்கும் வகையில் ஏதேனும் உருவங்கள் காலணியின் அடிப்பகுதியில் பதிக்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.

ஆனால் அது எம்மாதிரியான உருவம் என அவர் தெரிவிக்கவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. நிலவில் பதியப்போகும் அடுத்த கால்தடமும் இதற்கு முந்தைய கால்தடத்தைப் போல வரலாற்று நிகழ்த்தும். விண்வெளி ஆராய்ச்சியில் அது மற்றொரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.