;
Athirady Tamil News

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய செயலாளர் புங்குடுதீவு கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய செயலாளர் புங்குடுதீவு கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும், அக்குடும்பத்தின் மூத்தவரும், லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகசபை செயலாளரும், அறங்காவலரும், சமய, சமூகத் தொண்டருமான லண்டனில் வசிக்கும் கண்ணன் எனும் திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிள்ளைகளின் நிதிப் பங்களிப்பில், வவுனியா கிராமமொன்றில், கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துப் பாடி கொண்டாடப்பட்டதுடன், கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோருக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.

இதேவேளை லண்டனில் வசிக்கும் கண்ணன் எனும் திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிறிஸ்தவகுளம் புதுவீட்டுத்திட்டக் கிராம மக்கள் விரும்பிக் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க நிகழ்வில் கலந்து கொண்ட அக்கிராம மக்களுக்கான பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வுகளை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர் தோழர்.ஜாஸ்மின் அக்கா எனும் திருமதி ஜெயபாலினி ஹென்றிபெரேரா அவர்கள் உடனடியாக ஒழுங்கமைத்து சிறப்பாக நடத்தி இருந்தார்.

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் லண்டன் கண்ணன் எனும் திரு.சொக்கலிங்கம் கருணலிங்கம் அவர்கள், புங்குடுதீவு பிரபல வர்த்தகர் சொக்கர் என அழைக்கப்படும் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் மூத்த புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களது குடும்பத்தின் எந்தவிதமான நிகழ்வு என்றாலும் அந்நிகழ்வினை தாயக உறவுகளோடு இணைந்து கொண்டாடி உதவி செய்து வருபவர்கள் என்பதை கட்டாயம் சொல்ல வேண்டும். அதுவும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக இவர்கள் பல்வேறு வாழ்வாதார மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற நிகழ்ச்சி திட்டத்தினூடாக தொடர்ச்சியாக உதவி செய்து வருவது சிறப்பாக குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இவருக்கும் தாயக உறவுகளோடு இணைந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப்பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

08.04 2023.

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய செயலாளர் புங்குடுதீவு கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.