யாழ். நகரின் தூய்மைப் பணிகளுக்குத் தனியார் துறையைப் பயன்படுத்த யோசனை – வடக்கு மாகாண ஆளுநர்
;
கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
குப்பைகளை வீசுபவர்களைக் கண்டறிவதற்காக ஏனைய உள்ளூராட்சி மன்றங்கள் தமது எல்லைப் பகுதிகளில் சி.சி.ரி.வி. கமராக்களைப் பொருத்தி நடவடிக்கை எடுத்து வருவது போல , யாழ்ப்பாண மாநகர சபையும் இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
குப்பைகளைத் தரம்பிரித்துப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையைத் தொடர்ந்து பேணுவதுடன், மழைக்காலத்தில் மாத்திரமன்றி ஆண்டு முழுவதும் நகரின் வடிகால்கள் மற்றும் வாய்க்கால்களைத் தொடர்ச்சியாகத் துப்புரவாக வைத்திருக்க வேண்டும் என்றார்.
கல்லுண்டாயில் குப்பைகள் தரம்பிரிக்கப்படாமல் கொட்டப்பட்டதால் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டமையே அங்கு மக்களின் எதிர்ப்புக்குக் காரணமாக அமைந்தது,
குப்பைகளைக் குறிப்பிட்ட இடங்களில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போர், அதற்குப் பொருத்தமான மாற்று இடங்களை அடையாளம் காண்பதிலும் ஒத்துழைக்க வேண்டும்
குப்பைகளை முறையாகத் தரம்பிரித்து, உரிய முறையில் அகற்றினால் இத்தகைய மக்கள் எதிர்ப்புகளையும் தவிர்க்க முடியும். நகரின் சில பகுதிகளையாவது தனியார் சுத்திகரிப்பு சேவைக்கு வழங்குவதன் மூலம் தூய்மைப் பணிகளை வலுப்படுத்த முடியும்
நகரின் தூய்மையைப் பேணுவதில் மாநகர சபைக்கு மட்டுமன்றி வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பொறுப்பு உள்ளது.
நகரின் வாய்க்கால்களுக்குள் குப்பைகளைத் தள்ளுதல், பொதுவெளிகளில் குப்பைகளைக் கொட்டுதல் போன்ற செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். நகரைத் தூய்மையாகவும் ஒழுங்காகவும் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகள் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்