;
Athirady Tamil News

லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு, ஆனந்தமாக கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ)

0

லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு, ஆனந்தமாக கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ)
###################################

புங்குடுதீவை சேர்ந்த லண்டனில் வசிக்கும் ஆனந்தன் என அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம் ஆனந்தலிங்கம் அவர்களது பிறந்தநாள் கொண்டாட்டம் பண்ணி எல்லைக் கிராமத்தில் இயற்கையான சூழலில் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” ஒழுங்கமைப்பில் சிறுவர்கள் ஒன்று கூடி விமர்சையாக கொண்டாடப்பட்டது.

புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும், லண்டனில் அமரத்துவமடைந்த அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் தம்பதிகளின் புதல்வர்களில் ஒருவரான ஆனந்தன் என அழைக்கப்படும் லண்டனில் வதியும் திரு.ஆனந்தலிங்கம் அவர்களின் பிறந்ததினம் தாயகத்தில் மிக மகிழ்ச்சியாக பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.. சிறுவர்கள் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு ஆனந்தன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆனந்தன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வுக்கு வருகை தந்த அனைத்து சிறுவர்களுக்கும் பிறந்த நாளைக் கொண்டாடும் ஆனந்தன் அவர்களது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஊடாக சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது.

லண்டன் ஆனந்தன் அவர்களது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் மற்றும் கிராமிய இணைப்பாளர், சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் சில கோரிக்கைகள் எதிர்காலத்தில் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கையினை “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நிறைவேற்றுக் குழுவின் அனுமதியுடன் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதற்கு நிதிப்பங்களிப்பு செய்த லண்டன் ஆனந்தன் அவர்களது குடும்பத்திற்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவிக்கும் அதேநேரத்தில் பிறந்தநாள் கொண்டாடும் திரு.ஆனந்தன் அவர்களை, தாயக உறவுகளோடு “தேக ஆரோக்கியமாக எந்நாளும் மகிழ்ச்சியாக சந்தோசமாக நீண்ட ஆயுலோடு இறைவன் ஆசியுடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென” மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் வாழ்த்துகிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

05.08.2023

லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு, ஆனந்தமாக கொண்டாடப்பட்டது.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.