புங்குடுதீவு கோயில்களில் நாட்டாமை செலுத்தும் நபர் யார்? பின்னணி என்ன?? (முழுமையான விபரம்)
புங்குடுதீவு கோயில்களில் நாட்டாமை செலுத்தும் நபர் யார்? பின்னணி என்ன?? யார் அந்த சேயோன்?? (படங்களுடன் முழுமையான விபரம்)
தன்னைத் தானே புங்குடுதீவு மண்ணின் மைந்தன் என்று கூறிக் கொண்டு புங்குடுதீவில் உள்ள இரண்டுமூன்று கோயில்களில் நாட்டாமை செலுத்துவதுடன், அதுக்கென சில வாட்ஸாப் குழுமங்களை உருவாக்கியவர்களுடன் இணைந்து குடும்பங்கள் குறித்து தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்கிறாராம் *சேயோன்* எனும் ஜேசுபாலன் சேயோன்.
முதலில் புங்குடுதீவு மண்ணின் மைந்தன் என்பதன் அர்த்தமே சேயோன் என்பவருக்கு விளங்கவில்லை போல் உள்ளது, புங்குடுதீவு மகன் என்பதையே தவறாகப் புரிந்து, மண்ணின் மைந்தன் என பெருமை பேசி உள்ளார் போல் உள்ளது. *மண்ணின் மைந்தன்* என்பது படித்தவர்கள், பண்பாளர்கள், ஊர் சார்ந்தோ, சமூகம் சார்ந்தோ, ஊர்மக்கள் சார்ந்தோ செயல்பட்டவர்கள், செயல்படுபவர்களுக்கே இது பொருந்தும்.

குறிப்பாக இவரது தந்தை திரு.செபஸ்ரியான்பிள்ளை ஜேசுபாலன் *புங்குடுதீவு மண்ணின் மைந்தன்* தான். அவர் வன்னியில் புலிகளின் நாடகாசிரியர், எழுத்தாளர், கலைஞர் எனும் பன்முகம் கொண்டவர். 2009 க்கு பின்னர் புங்குடுதீவு வந்து புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டார பெத்தப்பா சிவன் ஆலயம், பாரதி சனசமூக நிலையம், பாரதி விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு அயராது உழைத்து அப்பிரதேச மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர், அதனால் அவர் *புங்குடுதீவு மண்ணின் மைந்தர்* தான்.
ஆயினும் யார் இந்த சேயோன்?? தன்னைத்தானே பெருமையாக வாட்ஸாப் குழுமங்களில் கதைத்துக் கொண்டு, கண்டதும் கதைப்பதினால் அக்குழுமங்களில் உள்ளவர்கள் இவரை *ஹீரோவாக* நினைத்து மயங்கி உள்ளனர்.
சேயோன் என்பவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர், பாரதி சனசமூக நிலைய செயற்பாட்டாளர், அவரது மனைவி திருமதி சேயோன் திரேசமலர் என்பவரும் கிறிஸ்தவர் தான், நசரேத் விளையாட்டுக் கழகத்தை சேர்ந்தவர் இருவரும் அதே புங்குடுதீவு பன்னிரெண்டாம் வட்டாரத்தை சேர்ந்தவர்கள், இருவரும் அண்மையில் நடந்த பிரதேச சபைத் தேர்தலில் இலங்கை அரசான ஜே.வி.பி கட்சி (NPP) சார்பாக போட்டியிட்டவர்கள்.
சரி விடயத்துக்கு வருவோம்.. மேற்படி சேயோன் என்பவர் அண்மைக்காலமாக புங்குடுதீவில் சில கோயில் நிர்வாக செயல்பாடுகளில் *வெளிநாடு மற்றும் அங்குள்ள சிலருடன் இணைந்து* குழப்பங்களை ஏற்படுத்துவதுடன், பொய்யான தகவல்களையும், சில குடும்பங்களின் மறைந்த பிள்ளைகளை உதாரணமாகக் காட்டி பதிவுகளை அதே கோயில்களின் வாட்ஸாப் குழுமங்களில் பதிவிடுவதாக ஆதாரத்துடன் தெரிய வருகிறது.
இவரும், கேதாரம், ஐயாத்துரை எனும் கிரிஷ்ரியன் ஆகிய மூவரை வைத்து ஊடகம் ஒன்று சமூகப் பற்றில்லாமல் செவ்வி கண்டு இருந்தது, அதில் கதைத்த சேயோன் ஜேசுபாலன், ஐயாத்துரை எனும் மறியதாசன் கிறிஸ்ரியன் இருவருமே கிறிஸ்தவர்கள் என்பதுடன், புங்குடுதீவு பெத்தப்பா சிவன் ஆலயம், அவ் பிரபல ஆலயத்தில் செய்யும் மூன்றாம் திருவிழாவை தான் நடத்துவது போன்று ஊடக பேட்டியில் தம்பட்டம் அடித்து இருந்தார் சேயோன்..
அந்த ஆலயத்தின் மூன்றாம் திருவிழாவானது பன்னிரெண்டாம் வட்டார பாரதி சமூகத்தை சேர்ந்த அனைத்து மக்களும் இணைந்து *பெத்தப்பா சிவன் ஆலயம்* சார்பில் நடத்துவதே உண்மை, அங்கு எந்தவொரு தனிநபரின் பெயரும் பாவிப்பதில்லை என்பதும் உண்மை, எவரும் தன்னிச்சயாக உரிமை கொண்டாடவும் முடியாது.
இதேவேளை சேயோன் என்பவர் உள்ள வாட்ஸாப் குழுமமொன்றில் அவர் பதிவிட்ட ஒலிப்பதிவில், *புங்குடுதீவில் எந்தப் பிரச்சினை நடந்தாலும் முன்னின்று செய்யக் கூடியவன் நான், நான் புங்குடுதீவில் எந்தக் கோயிலில் தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்கக் கூடிய ஒரேயொரு ஆள் நான் தான், எந்தக் கோயில் பிரச்சினையையும் தலையிடுவேன், எங்குமே களவு போகக் கூடாது, குறிப்பாக வெளிநாட்டுக்காரரின் காசு களவு போகாமல் காப்பது எமது உரிமை, அதனாலேயே கஷ்ரப்படுகிறோம்* என்று வீரப்பிரதாபம் கதைத்து உள்ளார்.
இது குறித்து பதில் தெரிவித்த சிலர், *கோயில்களில் உள்ள தவறுகளையும், பிரச்சினைகளையும் கோயில் நிர்வாகம் பார்க்கும், கோயில் நிர்வாகத்தில் உபயகாரர், சந்தா காட்டும் அங்கத்தவர்கள், நிர்வாகம் என்று உள்ளது இவருக்கு தெரியாதா? இவரை நாகதம்பிரான் கோயிலில் கூட்டத்தில் இருந்து, *நீர் கிறிஸ்தவன், உமக்கும் இக்கோயிலுக்கும் என்ன சம்பந்தமெனக் கேட்டு வெளியே போ என அனுப்பியது* எமக்குத் தெரியாது போன்று எதுக்கு அலட்டுகிறார்? கோயில் வேறு, சேர்ச் வேறு.. இந்துமதக்காரர்கள் போய் கிறிஸ்தவ சேர்ச் விடயங்களில் தலையிட முடியுமா*?? எனவும்..
முதலில் சேயோன் என்பவரை *புங்குடுதீவில் நடக்கும் மாட்டுக் களவு, புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களுக்கு உரிமையுடையவர்களின் வீடுகளில் உள்ள உடைமைகள் களவு, வாள்வெட்டு, தெருச்சண்டித்தனம் போன்றவற்றை புங்குடுதீவில் இல்லாமல் செய்ய எதுவும் செய்வதை விட்டு, தேவையில்லாமல் அலட்டக் கூடாது* எனவும் கருத்துத் தெரிவித்தனர்.
இதேவேளை *இவரது குடும்பம் மிகுந்த கஸ்ரத்தில் உள்ளதை பாவித்து வெளிநாட்டில் (குறிப்பாக சுவிஸ்) உள்ள சிலரின் பணத்துக்காக ஊரில் உள்ள சிலருடன் இணைந்து சேயோன் கீழ்த்தரமாகக் கதைப்பதாகவும், எழுதுவதாகவும்* இவரது உறவுகளே கவலையடைந்து கருத்துத் தெரிவித்தனர்.
*அதிரடி இணையத்துக்காக.. – தீவகன்*


