யாழில் இரவோடிரவாக கைது செய்யப்பட்ட இளைஞன் ; வெளியான பகீர் காரணம்
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பெருமளவு போதை மாத்திரைகளை, பொலிஸார் நேற்று (7) இரவு கைப்பற்றினர் சுன்னாகம் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சுன்னாகம் நகர்ப்பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனைக்கு இளைஞர் ஒருவர் எடுத்து வருவதாக குறித்த பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைவாக, சம்பவ இடத்திற்கு விரைந்த, பொலிஸ் பிரிவினர் 500 போதை மாத்திரைகளை கைப்பற்றினர்.
அத்துடன், 25 வயதான இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்