;
Athirady Tamil News

வவுனியா பண்டாரிக்குளத்தில் பசுமையான இலங்கை தேசிய வேலைத்திட்டம் முன்னெடுப்பு!! (படங்கள்)

0

பசுமையான இலங்கை ”’ ஒரு மரம் – ஒரு மனிதம்” தேசிய வேலைத்திட்டம் வவுனியா பண்டாரிக்குளம் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு முன்பாகவுள்ள குளத்தின் கீழ் இன்று (01.02.2022) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

பண்டாரிக்குளம் காவல் அரண் பொறுப்பதிகாரி திலகரத்ன அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இவ் தேசிய வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக பண்டாரிக்குளம் குளத்தின் கீழ் மரம் நடுகை இடம்பெற்றிருந்ததுடன் பிரதம மற்றும் கௌரவ விருந்தினர்கள் மரம் நாட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்துடன் பொதுமக்களின் வீடுகளில் நடுவதற்கான மரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் கலகமகே மற்றும் கௌரவ விருந்தினர்களாக உதவி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.பி.மல்வலகே , வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி , வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவுக்கான பொறுப்பதிகாரி ரோஷன் சந்திரசேகர ஆகியோரும் விருந்தினர்களாக கிராம சேவையாளர் , நகரசபை உறுப்பினர்கள் , கிராம அபிவிருத்தி சங்கத்தினர் , பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் , பொதுமக்கள் , பொலிஸார் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.