;
Athirady Tamil News

வடமராட்சி – துன்னாலை பகுதியில் சிறப்புற இடம் பெற்ற நெல் அறுவடையும் பொங்கல் விழாவும்! (படங்கள்)

0

யாழ்ப்பாணம், வடமராட்சி – துன்னாலை கிழக்கு கமக்கார அமைப்பு கரவெட்டி கமநல சேவை நிலையத்துடன் இணைந்து நடாத்திய நாள் நெல் அறுவடை விழாவும் பொங்கல் விழாவும் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் துன்னாலை கிழக்கு புளியங்கியான் சிதம்பர விநாயகர் ஆலய முன்றலில் துன்னாலை கிழக்கு கமக்கார அமைப்பு தலைவர் வே.சிவசிதம்பரம் தலமையில் இடம் பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக பிரதம, சிறப்பு கௌரவ விருந்தினர்கள் பாரம்பரிய முறைப்படி வயலுக்குச் சென்று நெல் அறுவடை செய்ததுடன் அதனை கொண்டுவந்து ஆலய முன்றலில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் நிகழ்வு இடம் பெற்றது.
அதனை தொடர்ந்து பிரதம. விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.நிசாந்தன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கரவெட்டி கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.திலீப்குமார், துன்னாலை கிழக்கு புளியங்கியான் விநாயகர் ஆலய அர்ச்சகர், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் திரு.தர்சன் மற்றும் விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வு மண்டபத்திற்கு அழைக்கப்பட்டு அங்கு குறித்த விருந்தினர்களால் மங்கல விளக்குகள் ஏற்றப்பட்டு மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதில் ஆசி உரையை ஆலய குரு முதல்வர் வழங்கியதை தொடர்ந்து வரவேற்புரை, தலமை உரை என்பன இடம் பெற்றன. தொடர்ந்து கருத்தரையை கரவெட்டி கலநல சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.திலீப் குமார், சிறப்பு உரையை யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.நிசாந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.
இதில் துன்னாலை கிழக்கு கமக்கார அமைப்பு பிரதிநிதிகள், கரவெட்டி பிரதேச செயலக அதிகாரிகள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.