;
Athirady Tamil News

வன்முறை ஊடாக தீர்வினை பெறமுடியாது – டக்ளஸ்!! (வீடியோ)

0

எமக்கிடையில் இருக்கின்ற அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், கலந்துரையாடல்களை மேற்கொண்டு எமது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வினை காண்போம். எமது எதிர்காலத்தினையும் எமது தாய்நாட்டினையும் பாதுகாப்போம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உங்களின் உணர்வுகளையும் அதில் இருக்கின்ற நியாயங்களையும் நாங்கள் புரிந்து கொள்ளுகின்றோம். – அதற்கு மதிப்பளிக்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் – மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசெகரியங்கள் களையப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருகின்றது.

ஆனால் எத்தகைய பிரச்சினைகளையும் வன்முறைகளுக்கூடாக தீர்க்க முடியாது என்பதை நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகின்றவர்கள் நாம்.

இதன்காரணமாக புலிகள் எம்மில் பலரை கொலை செய்திருக்கின்றார்கள். என்னை கொலை செய்வதற்கு பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கின்றார்கள். எனினும் தென்னிலங்கயைில் வாழ்ந்து வருகின்ற சிங்கள மக்களுடன் தேசிய நல்லிணக்கத்தினையும் நல்லுறவையும் வலுப்படுத்துவதன் மூலமே, பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்பதை உறுதியுடன் தெரிவித்து வந்துள்ளோம்.

அதனடிப்படையிலேயே எமது அரசியல் செயற்பாடுகளும், தென்னிலங்கை மக்களுடனும் அரசியல் கட்சிகளுடனான எமது உறவும் இருந்து வருகின்றது.

இந்த அணுகுமறையினையே உங்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். வன்முறைகள் ஊடாக எமது பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

எனவே, எமக்கிடையில் இருக்கின்ற அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், கலந்துரையாடல்களை மேற்கொண்டு எமது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வினை காண்போம். எமது எதிர்காலத்தினையும் எமது தாய்நாட்டினையும் பாதுகாப்போம் என்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
ஜனாதிபதி பதவி விலகினால் சஜித் பிரதமராவார் !! (வீடியோ)

“பேச்சுவார்த்தைகள் தொடரும்” !! (வீடியோ)

’யானை தன் தலையில் மண்ணை போட்டுக்கொண்டது’ !! (வீடியோ)

நாட்டிற்கு சேவையாற்றத் தயார்: கரு !! (வீடியோ)

’பொலிஸாரின் செயற்பாடுகள் வெறுக்கத்தக்கவை’ !! (வீடியோ)

ஜீவனின் கருத்தை வரவேற்றார் சுமந்திரன் !! (வீடியோ)

’கட்சித் தலைவர் கூட்டம் இணைய வழியில்’ !! (வீடியோ)

ஜனாதிபதி பதவி விலகும் வரை மக்கள் போராட்டம் தொடரும் நிலை – புத்திஜீவிகள் நம்பிக்கை!! (வீடியோ)

இலங்கையர்கள் ஒன்றிணைய வேண்டிய தருணம் – ஜனாதிபதி அழைப்பு!! (வீடியோ)

எந்த அரசியல் பிரமுகரும் இந்தியாவுக்கு தப்பியோடவில்லை – இந்திய உயர்ஸ்தானிகராலயம்!! (வீடியோ)

பா.உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும்!! (வீடியோ)

பொலிஸ் ஜீப்பை கொளுத்த முயற்சி !! (வீடியோ)

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைகளில் 9 பேர் உயிரிழப்பு ! – 88 வாகனங்கள், 103 வீடுகளுக்கு சேதம்!! (வீடியோ)

துப்பாக்கிச் சூடு – நால்வர் காயம்!! (வீடியோ)

ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு!! (வீடியோ)

நீர்கொழும்பில் பதற்றம்: வீடுகள் மீது தாக்குதல் !! (வீடியோ)

டி.ஏ. ராஜபக்ஷவின் சிலை இழுத்து வீழ்த்தப்பட்டது !! (வீடியோ)

மக்களின் முடிவுக்கு ஆதரவளிப்பதாக இந்தியா அறிவிப்பு !! (வீடியோ)

தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல்!! (வீடியோ)

வன்முறைகளுக்கு ஐ.நா கண்டனம்!! (வீடியோ)

’ பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார் அப்பா’ !! (வீடியோ)

மல்வானை அதிசொகுசு வீட்டுக்கு தீ வைப்பு !! (வீடியோ)

கங்காராமவில் துப்பாக்கிச் சூடு: பதற்றம்!! (வீடியோ)

காலி முகத்திடல் வன்முறைகளில் சிறைக்கைதிகள் ஈடுபடுத்தப்பட்டனரா? (வீடியோ)

இந்திய ஊடகம் வெளியிட்ட புகைப்படம் !! (வீடியோ)

58 கைதிகள் காணாமல் போயுள்ளனர் !! (வீடியோ)

மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை !! (வீடியோ)

ராஜபக்ஷ குடும்பம் தஞ்சம்; திருமலையில் பதட்டம் !! (வீடியோ)

மஹிந்த வெளிநாட்டுக்குப் பயணம்? (வீடியோ)

வருகைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் !! (வீடியோ)

இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்படலாம்; சந்திரிக்க எச்சரிக்கை !! (வீடியோ)

பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதிக்கு அழைப்பு !! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.