;
Athirady Tamil News

செத்துப்போனவர்களுக்கு திருமணம்..!!

0

கர்நாடகாவில் தட்ஷிண கன்னடா மாவட்டத்தில் மக்கள் மத்தியில் விநோதமான ஒரு பழக்கம் உள்ளது. சிறு வயதில் செத்து போனவர்களுக்கு அவர்கள் 30 ஆண்டுகள் கழித்து திருமண நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதாவது அவர்களது ஆவிக்கு திருமண சடங்குகள் நடத்தப்படுகின்றன. உயிர் உள்ளவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வது போலவே இறந்து போனவர்களுக்கு மணப்பெண் தேடுகிறார்கள். அதே 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன பெண் ஆவியை திருமணத்திற்காக பேசி முடிக்கிறார்கள். பிறகு குறிப்பிட்ட நாளில் இரு ஆவிகளுக்கும் திருமணம் நடத்தப்படுகிறது. இந்த கல்யாணத்தை ‘பிரேத கல்யாணம்’ என்று அவர்கள் அழைக்கிறார்கள். கேரளாவிலும் கூட இந்த பிரேத கல்யாணம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சிறுவயதில் உயிர் இழந்தவர்களின் ஆத்மாவை சாந்தப்படுத்தும் வகையில் பிரேத திருமணம் நடத்தப்படுவதாக சொல்கிறார்கள். சமீபத்தில் நடந்த ஒரு பிரேத திருமணம் சமூக வலைதளத்தில் பரவி வைரலானது. பிரேத திருமணம் நடத்தப்படுவதால் குடும்பங்களுக்கு ஆத்மாக்களின் ஆசி கிடைப்பதாக சொல்கிறார்கள். சிறுவர்களுக்கும், திருமணம் ஆகாதவர்களுக்கும் பிரேத திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. பிரேத திருமணம் நடந்த அன்று விருந்துகளும் கொண்டாட்டங்களும் நடத்தப்படுவது வழக்கம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.