;
Athirady Tamil News

கல்முனை அல்-ஹாமியா அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா!! (6th Convocation)

0

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அல் ஹாமியா அரபுக்கல்லூரியின் 6 ஆவது பட்டமளிப்பு விழா அரபுக்கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில் நாளை (03) சனிக்கிழமை காலை 8:30 மணிக்கு அரபுக்கல்லூரி வளாகத்தில் கல்லூரி அதிபர் ஏ.சி தஸ்தீக் மதனி தலைமையில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இவ்விழாவில் பேராதனை பல்கலைக்கழக அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பிரிவு பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம் சலீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள உள்ளார்

மேலும் கௌரவ விருந்தினராக கல்லூரியின் ஆளுநர் சபைத் தலைவர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளை அரபுக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் ஏ.எல் நாஸிர் கனி உள்ளிட்ட விழாக்குழுத் தலைவர் முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபருமான அப்துல் கபூர் பொருளாளர் எம்.எம்.எம் மன்சூர் முன்னார் பழைய மாணவர் சங்க தலைவர் யு.எல்.எஸ் ஹமீட் ஹாமி கல்லூரி அதிபர் ஏ.சி தஸ்தீக் மதனி மற்றும் பழைய மாணவர் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களானவை.பி.ஏ சுல்தான் எம்.ஐ.எம் மாஜீட் எம்.ஐ.எம் ஹசன்முபாறக் , ஏ.எல் நௌபர் ,ஏ.அலி அஹமட் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஆலிம்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமாபாத் பகுதியில் அமைந்துள்ள அல்-ஹாமியா அரபுக் கல்லூரி கலாபீடம் ஸ்தாபிக்கப்படும்போது இந்நாட்டில் சுமார் 75 அரபுக் கல்லூரிகளே காணப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை ஷர்கிய்யா அரபுக் கல்லூரி சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி என்பனவற்றுக்கு அடுத்தபடியாக 1979.12.07 ஆம் திகதி உருவாக்கப்பட்ட மிகப்பிரசித்தி பெற்ற மூன்றாவது அரபுக் கல்லூரியாக கல்முனை அல்- ஹாமியா அரபுக் கல்லூரி விளங்குகின்றது.

அல்-ஹாமியா அரபுக் கல்லூரி ஹிமாயதுல் இஸ்லாம் இயக்கத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இது 1979 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட உன்னத நோக்கம் கொண்ட ஓர் அமைப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.