கைவிடப்பட்ட கப்பலில் புலம்பெயர்ந்தோர்! பிரசவித்த பெண்கள்..54 பேர் மீட்பு
மத்திய தரைக்கடலில் கைவிடப்பட்ட எண்ணெய் கப்பலில் 54 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டனர்.
கைவிடப்பட எண்ணெய் கப்பலில்
லிபியாவில் இருந்து புறப்பட்ட ரப்பர் படகில் பயணித்த பலர் விபத்தில் சிக்கினர். இதனால் கைவிடப்பட எண்ணெய் கப்பலில் மூன்று நாட்களாக அவர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தன்னார்வ மீட்புக்குழு, கப்பல் மூலமாக 54 பேரை மீட்டு, இத்தாலிய தீவான லம்பேடுசாவுக்கு அனுப்பி வைத்தது.
அங்கு கர்ப்பிணியாக இருந்த பெண்ணொருவர் பிரசவித்தார். மற்றொரு புலம்பெயர் பெண் சில நாட்களுக்கு முன் பிரசவித்ததாக தெரிய வந்துள்ளது.
23,000 புலம்பெயர்ந்தோர்
கசிவு மற்றும் நெரிசலான படகுகளில் மத்திய தரைக்கடலை கடக்கும் புலம்பெயர்ந்தோர் கடல் எண்ணெய் தளங்களில் தஞ்சம் அடைவது தொடர்கதையாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூன் 1ஆம் திகதி நிலவரப்படி, இந்த ஆண்டு சுமார் 23,000 புலம்பெயர்ந்தோர் கடல் வழியாக இத்தாலியை அடைந்துள்ளதாக ஐ.நா புலம்பெயர் முகாமையான UNHCR தெரிவித்துள்ளது.