;
Athirady Tamil News

குஜராத், இமாசலில் ஆட்சியில் அமரப்போவது யார்? – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு..!!

0

குஜராத், இமாச்சலபிரதேச சட்டசபைக்கும், டெல்லி மாநகராட்சிக்கும் தேர்தல் நடைபெற்றது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 1-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அதேபோல், 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேசத்திற்கு கடந்த 12-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேலும், 250 வார்டுகளுக்கான டெல்லி மாநகராட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. ஆங்கில, இந்தி செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பின்வருமாறு: குஜராத் – மொத்த தொகுதிகள் 182 – பெரும்பான்மைக்கு 92 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனம்: பாஜக – 117 முதல் 140 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் கூட்டணி – 34 முதல் 51 இடங்களில் வெற்றி, ஆம் ஆத்மி – 6 முதல் 13 இடங்களில் வெற்றி ரிபப்ளிக் டிவி செய்தி நிறுவனம்: பாஜக – 128 முதல் 148 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் – 30 முதல் 42 இடங்களில் வெற்றி, ஆம் ஆத்மி – 2 முதல் 10 இடங்களில் வெற்றி டிவி 9 குஜராத்தி செய்தி நிறுவனம்: பாஜக – 125 முதல் 130 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் கூட்டணி – 40 முதல் 50 இடங்களில் வெற்றி, ஆம் ஆத்மி – 3 முதல் 5 இடங்களில் வெற்றி என்டி டிவி செய்தி நிறுவனம்: பாஜக – 131 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் கூட்டணி – 41 இடங்களில் வெற்றி, ஆம் ஆத்மி – 10 இடங்களில் வெற்றி பெரும்பாலான செய்தி நிறுவனங்களில் கருத்துக்கணிப்பு அடிப்படையில் குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெறலாம். இமாச்சலபிரதேசத்தில் 68 தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மைக்கு 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும். ஆஜ் தக் செய்தி நிறுவனம்: பாஜக – 24 முதல் 34 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் – 30 முதல் 40 இடங்களில் வெற்றி, ஆம் ஆத்மி – 0 இந்தியா டிவி செய்தி நிறுவனம்: பாஜக – 35 முதல் 40 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் – 26 முதல் 31 இடங்களில் வெற்றி, ஆம் ஆத்மி – 0 நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனம்: பாஜக – 32 முதல் 40 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் – 27 முதல் 34 இடங்களில் வெற்றி, ஆம் ஆத்மி – 0 ரிபப்ளிக் டிவி செய்தி நிறுவனம்: பாஜக – 34 முதல் 39 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் – 28 முதல் 33 இடங்களில் வெற்றி, ஆம் ஆத்மி – 0 முதல் 1 இடத்தில் வெற்றி என்டி டிவி செய்தி நிறுவனம்: பாஜக – 37 இடங்களில் வெற்றி, காங்கிரஸ் – 30 இடங்களில் வெற்றி, ஆம் ஆத்மி – 0 முதல் 1 இடத்தில் வெற்றி பெரும்பாலான செய்தி நிறுவனங்களில் கருத்துக்கணிப்பு அடிப்படையில் இமாச்சலபிரதேசத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடிக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.