;
Athirady Tamil News

புதிய வகை வைரஸ் காய்ச்சல் 2 வாரங்களில் குறைய தொடங்கும்- மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் !!

0

நாடு முழுவதும் பரவி வரும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் மக்களை சிரமத்துக்குள்ளாக்கி இருக்கிறது. சாதாரண பருவநிலை காய்ச்சலாக இருந்தாலும் இந்த புதிய வகை வைரஸ் தாக்கம் குழந்தைகளையும், முதியவர்களையும் உயிரிழக்கும் நிலைக்கு கொண்டு போய் விடுகிறது. இந்த காய்ச்சலுக்கு கர்நாடகா, அரியானா மாநிலங்களில் தலா ஒருவர் வீதம் 2 பேர் இறந்து இருக்கிறார்கள். எனவே அனைத்து மாநிலங்களையும் மத்திய சுகாதாரத்துறை உஷார்படுத்தி இருக்கிறது. சுகாதாரத்துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில் நடந்த பரிசோதனையில் 3 ஆயிரத்து 38 பேருக்கு இன்புளூயன்சா காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. எச்3என்2 வைரஸ் உள்பட சிலவகை வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனவரி மாதம் 1245 பேருக்கும், பிப்ரவரி மாதம் 1307 பேருக்கும், இந்த மாதம் 9-ந்தேதி வரை 486 பேருக்கும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் பருவ கால வைரஸ் காய்ச்சல் இரண்டு கட்டங்களாக பரவும். அதாவது ஜனவரி முதல் மார்ச் வரையிலான பருவ காலத்தில் ஒரு பகுதியாகவும் அதன்பிறகு ஒரு பகுதியாகவும் பரவும். தற்போது பரவி வரும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் இந்த மாத இறுதியில் குறைய தொடங்கும். எச்3என்2 வைரசை தவிர எச்1என்1 வைரசும் அதிக அளவில் பரவி வருகிறது. இது மிக அதிகமாக தமிழ்நாட்டில் பரவி இருக்கிறது. இதுவரை 545 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 170 பேருக்கும், குஜராத்தில் 74 பேருக்கும், கேரளாவில் 42 பேருக்கும், பஞ்சாபில் 28 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எச்1என்1 காய்ச்சலுக்கு ஆசெல்டாமிவிர் (Oseltamivir) என்ற மருந்தை உலக சுகாதார மையம் பரிந்துரைத்துள்ளது. இதே மருந்தை எச்3என்2 காய்ச்சலுக்கும் கொடுக்கலாம். இந்தியாவில் இந்த மருந்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் தேவையான அளவு கையிருப்பிலும் உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.