;
Athirady Tamil News

கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதி ; தலைமறைவான காதலன்

0

கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய திருமணமாகாத யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலையை செய்ததாக சந்தேகப்படும் , அதே தொழிற்சாலையில் உதவியாளராக பணியாற்றிய திருமணமான ஊழியர், சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியுள்ளார்.

பதுளை, கெப்பெட்டிபொல பகுதியைச் சேர்ந்த இவர், தற்காலிகமாக கஹதுடுவ பகுதியில் தங்கியிருந்து வேலை செய்துள்ளார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரத்தம் படிந்த கூர்மையான கத்தி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.