;
Athirady Tamil News

வீட்டு உபயோக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.200ஆக அதிகரிப்பு- மத்திய அரசு!!

0

சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் , டீசல் விலை மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப்படும் நிலையில், கேஸ் சிலிண்டர்களின் விலை மாதமாதம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த மாதம் (மார்ச்) சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ரூ. 1068 ஆக இருந்த சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ. 1,118.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வழங்கப்படும் வீட்டு உபயோக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டர்களுக்கு மட்டும் மானியம் ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.