;
Athirady Tamil News

பீகார் கலவரத்தில் ஒருவர் பலி- வன்முறை குறித்து கவர்னரிடம் கேட்டறிந்த அமித்ஷா!!

0

நாடு முழுவதும் ராம நவமி கொண்டாட்டங்கள் கடந்த 30-ந்தேதி நடந்தன. பீகாரில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டது. நாலந்தா மற்றும் சசரம் பகுதிகளில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை உருவானது. ரோத்தாஸ் மாவட்டம் சசரம் பகுதியில் நடந்த ஊர்வலத்தின் போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு மற்றும் வன்முறை சம்பவம் நிகழ்ந்தன. அதைத்தொடர்ந்து குண்டு வெடிப்பு நடந்தது.

இதில் 6 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல நாலந்தா மாவட்டம் பீகார்ஷெரீப் பகுதியில் நடந்த ஊர்வலத் தின்போதும் மோதல் ஏற் பட்டது. இதில் ஒருவர் பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து கலவரம் நடந்த 2 பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்ட னர். வன்முறை தொடர்பாக 80 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பீகார் வன்முறை சம்பவம் தொடர்பாகவும், தற்போதைய நிலவரம் குறித்தும் கவர்னரிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேட்டறிந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.