;
Athirady Tamil News

கோடைக்கால டிப்ஸ் !! (மருத்துவம்)

0

கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டாலே, பலருக்கும் பல பிரச்சினை ஏற்பட ஆரம்பித்துவிடும். கண் எரிச்சல், கைகால் எரிச்சல், உடல் முழுவதும் அனலாக எரிவது, பசி வராமை, சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுத்து இறங்குதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளைக் கூறிக்கொண்டே போகலாம்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறையை, சித்த மருத்துவம் வலியுறுத்தி வருகிறது. வாரம் இரண்டு நாள்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது. 100 மில்லிலீற்றர் நல்லெண்ணெய்யில் 20 சீரகம், 4 மிளகைப் போட்டு, சூடாக்கி, சீரகம் சிவந்த பின்பு எண்ணெய்யை அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டி, சூடு சற்றுக் குறைந்ததும் தலை, நெற்றி, காது மடல்; பிடரி, உடல் முழுவதும் தேய்த்து, 15 அல்லது 20 நிமிடங்கள் ஊற வைத்து குளித்து வந்தால், உடல் சூடு, கண் எரிச்சல் நீங்கும்.

நமது நகரங்களிலுள்ள ஆயுர்வேத அதாவது சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஜாதி சம்பீரக் குழம்பு என்ற மருந்தை, காலை அல்லது இரவு படுக்கும் போது, நாக்கில் 2,3 நாள்கள் தடவிவர, இந்தக் ​கோடைக்கால பசியின்மை நீங்க நன்றாக பசியெடுக்கும். அத்தோடு, கறுப்பு திராட்சை, பேரீச்சம்பழம் கொய்யாப்பழம், பப்பாளிப்பழம் போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிடுங்கள். இவை, குழந்தைகளுக்கு மிகவும் பொருத்தமானது. அப்படியும் பசி எடுக்கவில்லை என்றால், பெருங்காயம், வெள்ளைப்பூண்டு, ஓமம் ஆகியவற்றை லேசாக தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து 5 முதல் 10 மில்லிலீற்றர் அளவு குடித்தால், பசியெடுக்க ஆரம்பிக்கும்.

சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுத்து இறங்குதல் போன்ற பிரச்சினைக்கு, சோற்றுக்கற்றாழை மடலின் தோலை சீவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் ஏழு முறை நன்கு கழுவி விட வேண்டும். 35 கிராம் சோற்றுக் கற்றாழைச் சதைக்கு, அரை லீற்றர் மோர் சேர்த்து, அரைப்பானில் நன்றாக அரைத்து, லேசாக பெருங்காயம் போட்டு தாளித்து சாப்பிட, இப்பிரச்சினை நீங்கி, வயிற்றுவலி குணமாகிவிடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.