;
Athirady Tamil News

கொட்டித் தீர்க்கும் மழையிலும் பேஸ்புக் விருந்து ; அதிகாலையில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

0

தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட ‘பேஸ்புக் விருந்து’ ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், போதைப்பொருட்களுடன் 22 இளைஞர்களையும் 4 யுவதிகளையும் கைது செய்துள்ளனர்.

இன்று (13) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின் போது, பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் விபரம்,

ஐஸ் போதைப்பொருள் – 4134 மி.கி

ஹேஸ் (Hash) – 1875 மி.கி

குஷ் (Kush) – 2769 மி.கி

கொக்கேய்ன் – 390 மி.கி

மஷ்ரூம் (Mushroom) போதைப்பொருள் – 804 மி.கி

போதை மாத்திரைகள் – 13 சட்டவிரோத சிகரெட்டுகள் – 12 கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 18 முதல் 31 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் கண்டி, முல்லேரியா, ஹட்டன், பிலகல, அத்துருகிரிய, கொட்டகெதர, ஹோமாகம, தொம்பே, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட யுவதிகள் 21 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், கண்டி, நீர்கொழும்பு மற்றும் பூண்டுலோயா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பாகத் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.