;
Athirady Tamil News

60 தொகுதியில் பொருத்தமற்ற வேட்பாளர்கள்.. கர்நாடகாவில் காங். படுதோல்வி அடையும்: பசவராஜ் பொம்மை கணிப்பு!!

0

கர்நாடக சட்டசபைத் தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜகவை தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வரும் காங்கிரஸ் கட்சி, மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை முடுக்கிவிட்டுள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று சிவமோகாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் நியமித்துள்ள வேட்பாளர்களில் 60 வேட்பாளர்கள் பொருத்தமான வேட்பாளர்கள் இல்லை. எனவே, எங்கள் கட்சியில் இருந்து தலைவர்களை இழுக்க முயற்சிக்கின்றனர். நான் ஏற்கனவே கூறியபடி, டிகே சிவக்குமார் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும்போது எங்கள் எம்எல்ஏக்களை தொடர்புகொண்டு, சீட் கொடுப்பதாக கூறி கட்சியில் இணையும்படி கேட்டிருக்கிறார்.

மாநிலத்தில் அடிப்படை மற்றும் அரசியல் குறித்த தெளிவும் காங்கிரசுக்கு இல்லை. எனவே, கடந்த தேர்தலை விட இந்த முறை அவர்கள் (காங்கிரஸ்) மோசமான தோல்வியை சந்திப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். பாஜக எம்எல்ஏக்களுக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்ததாகவும், காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத தொகுதிகளில் அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக கூறியதாகவும் பசவராஜ் பொம்மை சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் 2019ல் பாஜக தலைவர்கள்தான் தங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை இழுத்ததாக டி.கே.சிவக்குமார் பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.