;
Athirady Tamil News

கர்நாடக சட்டசபை தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

0

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 21-ந் தேதி நடைபெற்றது. இதில் 678 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 3 ஆயிரத்து 44 மனுக்கள் ஏற்கப்பட்டன. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் 517 பேர் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்று போட்டியில் இருந்து விலகி கொண்டனர். இதையடுத்து நேற்று தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது இதில் சட்டசபை தேர்தல் களத்தில் 2,613 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 2,427 பேர் ஆண்களும், 184 பேர் பெண்களும், 3-ம் பாலினத்தினர் 2 பேரும் அடங்குவர். முக்கிய கட்சிகளை பொறுத்தவரையில் பா.ஜனதா வேட்பாளர்கள் 224 பேரும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 223 பேரும், ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் 207 பேரும் களத்தில் உள்ளனர்.

புலிகேசிநகர் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளர் அன்பரசன் மனுவை வாபஸ் பெற்றார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர்கள் 2 பேரும் மனுக்களை வாபஸ் பெற்றனர். அதாவது காந்திநகரில் அந்த அணி வேட்பாளர் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜூம் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றனர். புலிகேசிநகரில் அந்த அணியின் வேட்பாளர் நெடுஞ்செழியன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.