;
Athirady Tamil News

அமெரிக்க இடைத் தேர்தல்;366 மில்லியன் டொலர் கொடுத்த எலான் மஸ்க்!

0

அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி (Republican Party) தனது காங்கிரஸின் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும் வகையில், எலான் மஸ்க் 366 மில்லியன் அமெரிக்க டொலர் அளித்துளதாக கூறப்படுகின்றது.

உலகின் முன்னணிப் பணக்காரரான எலான் மஸ்க் இதுவரை சுமார் 366 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக ‘ராய்ட்டர்ஸ்’ தெரிவித்துள்ளது.

தேர்தல் களத்தில் மிகப்பெரிய தனிநபர் அரசியல் நன்கொடை
இதில் 276 மில்லியன் டொலர்கள் கடந்த ஜூலை மாதத்திற்குப் பிந்தைய குறுகிய காலத்திற்குள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபை (House of Representatives) மற்றும் செனட் (Senate) சபை ஆகிய இரண்டிலும் ஜனநாயகக் கட்சி (Democratic Party) மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையிலும், எலான் மஸ்க் இந்த பெருந்தொகையைச் செலவிட்டு வருகிறார்.

இந்த பிரம்மாண்ட நன்கொடைகளின் மூலம் நடப்பாண்டு தேர்தல் களத்தில் மிகப்பெரிய தனிநபர் அரசியல் நன்கொடையாளராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளதாகத் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.